வீட்டுத்தோட்டம் அமைக்கலாம் வாங்க!!
வீட்டில் தோட்டம் அமைத்தால் வாழ்வு வளமாகும். தோட்டம் அமைக்க தொழு உரம், ஆற்று மணல் மற்றம் வீட்டுமண் மூன்றும் 1:1:1 விகிதத்தில் இருக்க வேண்டும்.
மரங்களுக்கு குப்பைகளை போடுவது நல்லது என்பது பலரது தவறான அபிப்பிராயம். குப்பைகளை தோட்டம் அமைக்கிறபோது பாத்திகட்டி, அதை நான்காக, எட்டாக, பதினாறாக பிரித்துக்கொள்ளவும். கடைசி இரண்டு பங்கில் பப்பாளி, தவசிக்கீஐ (மல்ட்டி வைட்டமின் கீரை), கறிவேற்பிலை, எலுமிச்சை போன்றவற்றை வைக்கலாம். அடுத்து ஒரு பாத்தியில் தக்காளி, வெண்டை, கத்திரி போடலாம். வெண்டை, பூசணி போன்றவற்றை விதையாக விதைக்கலாம். தக்காளி, கத்திரி, மிளகாய் போன்றவற்றை நாற்றுகளாக வாங்கி நடலாம். எப்போதும் செடிகளுக்கு இயற்கை உரம் போடுவது மண்ணுக்கும், நமக்கும் பாதுகாப்பு.
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் பூக்காத, குறைந்த ஒளிதேவைப்படுகிற இலைகளே அழகு சேர்க்கும் செடிகளை வளர்க்கலாம். பிலோடென்ட்ரான், பெப்பரோமியா, அரேபியா, மணிபிளான்ட், இந்தியன் ரப்பர் பிளான்ட் போன்றவை இந்த ரகம். வீட்டிற்குள் வளர்கிற செடிகளுக்கு தண்ணீரை அளந்துவிட வேண்டும். இர்ண்டு செட் செடிகளை வைத்திருந்து ஒரு செட் வீட்டின் வெளியேயும், இன்னொரு செட் வீட்டிற்குள்ளேயும் இருக்கட்டும். வாரத்துக்கு ஒருமுறை உள்ளே உள்ளவற்றை வெளியேயும், வெளியே உள்ளவற்றை உள்ளேயும் மாற்றி வைக்கலாம். வீட்டினுள் வளர்கிற செடிகளின் இலைகள் பழுப்பு நிறமாக இருந்தால் தண்ணீர் அதிகம் என்றோ அல்லது ஒளி குறைவோ என்று அர்த்தம்.
செடிகளுக்கு மருந்தோ, உரமோ அவை வெளியில் இருக்கும்போதுதான் அடிக்க வேண்டும். காற்றை சுத்தப்படுத்தும் பெரணி செடிகளை வீட்டினுள் வைக்கலாம். ஓரளவுக்கு சுமாராக வளர்ந்த இந்த ஒரு செடி 25 அடி சதுர அடி காற்றை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது. பால்கனியில் செடிகள் வளர்க்க வேண்டுமானால் 50 சதவிகித வெயிலாவது இருக்க வேண்டும். கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய பால்கனியாக இருப்பது நல்லது. ரோஜா வளர்க்க எல்லோருக்கும் ஆசை. ஆனால் நம் ஊர் சீதோஷ்ணத்துக்கு நாட்டு ரோஜாதான் வளரும். உயர்ரக ரோஜாக்கள் என்றால் அதை வாங்கும் நர்சரியில் இருந்து சரியான உயரமும், ரோஸ் மிக்சரும் வாங்கி உபயோகிக்க வேண்டும். மீன் கழுவிய தண்ணீர் விடலாம். இது கிடைக்காதவர்கள் பிஷ்மீல் அல்லது போன்மீல் என்றே உரக்கடையில் கிடைக்கும். அதை உபயோகிக்கலாம். சர்க்கரை சேர்க்காத டீத்தூள் போடலாம்.
என்ன நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
Labels: agriculture
2 Comments:
அருமையான தகவல் நன்றி
அன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
thanks for your good information
vinoj
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI