Followers

Friday, December 25, 2009

Monday, December 21, 2009

வாழ்வியல்


நீ எப்படி வாழ விரும்புகிறாய் என்பதற்கான உன் தளரா முயற்சியினாலேயே நீ பிறருடைய பாராட்டினைச் சம்பாதிக்கமுடியும்.

புற அழகை விட்டுத்தள்ளுங்கள்; அக அழகை அளித்தமைக்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்துங்கள்!

மனச்சாட்சித் தெளிவில்லாமல் பிறரைக்காட்டிலும் நல்ல முறையில் வாழ்வதாக, யாராலும் தோற்றமளிக்க முடியாது.

திருப்தி என்பது இயற்கைச் செல்வம், ஆடம்பரம் என்பது செயற்கை வறுமை.

ஒரு நல்ல மனிதனுக்கு வாழ்க்கையிலும் சரி, மரணத்திலும் சரி எந்தத்தீங்கும் நேர்ந்து விடாது என்பது உண்மை.  எனவே மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வோம்.

அழகு............

காலிபிளவர் பஜ்ஜி


காலிபிளவர் பஜ்ஜி சாப்பிட்டிருக்கீர்களா? எ‌ன்ன இல்லையா... இதோ உங்களுக்கான செய்முறை.
தேவையான பொரு‌ட்க‌ள்:

காலிபிளவர் - 1
எண்ணெய் - பொ‌ரி‌க்க
கடலை மாவு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை:

காலிபிளவரை சுடு‌நீ‌ரி‌ல் ‌மு‌க்‌கி எடு‌த்து ‌பி‌ன்ன‌ர் பூ‌க்களை த‌னி‌த்த‌னியாக ‌பி‌ரி‌த்து லேசாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பஜ்ஜிமாவுடன் தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி காய ‌விடவு‌ம்.

வேக வைத்த காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான காலிபிளவர் பஜ்ஜி தயார்.

Sunday, December 20, 2009

ஜூலு நாட்டில் மாவீரன்!

(OSHO's story)
ஜூலு நாட்டில் மாவீரன் ஒருவன் இருந்தான். அவன் அந்நாட்டு மன்னனிடம் சென்று அவனது மகளைத் தனக்குத் திருமணம் செய்துதருமாறு கேட்டான்.

'நான் இடுகின்ற மூன்று கட்டளைகளை அணுவளவும் பிசகாது எவன் ஒருவன் நிறைவேற்றி வைக்கின்றானோ, அவனுக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்' என்று அந்த மன்னன் அவனுக்குப் பதில் அளித்தான்.

'அந்த மூன்று கட்டளைகள் என்னென்ன? சொல்லுங்கள் மன்னவா! உடனே அவற்றை நிறைவேற்றி வைக்கிறேன்!' என்றான் அந்த மாவீரன்.

'நான் மூன்று கூடாரங்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றேன். முதல் கூடாரத்தில் பெரியதொரு சாராயப் பீப்பாய் இருக்கிறது. அதில் உள்ள சாராயம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்து விட வேண்டும்'.

'இந்தக் காரியத்தை முடித்த கையோடு உடனே இரண்டாவது கூடாரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த கொரில்லா குரங்கு ஒன்று இருக்கும். ஏழு அடி உயரம் உள்ள அந்த கொரில்லா குரங்கிற்குத் தொல்லை தரும் பல் எது என்பதைக் கண்டு பிடித்து, அந்தப் பல்லை வெறுமனே கையினாலேயே பிடுங்கி எறிய வேண்டும்.

இந்த வேலை முடிந்தவுடன் சிறிதும் தாமதியாது மூன்றாவது கூடாரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ஒரு ஆங்கிலேயப் பெண் இருப்பாள். எந்த ஒரு ஆண்மகனும் அவளை உடலுறவில் முழுதும் திருப்தி செய்ய முடியாதபடி ஒரு தனிப் பயிற்சி பெற்றவளாக இருப்பாள். அவளோடு உடலுறவு கொண்டு அவளை முழுவதும் திருப்தி செய்ய வேண்டும்' என்றான் மன்னன்.

'சரி மன்னவா!' என்று கூறிவிட்டு அந்த மாவீரன் முதல் கூடாரத்தினுள் நுழைந்தான். ஒரே மூச்சில் பீப்பாய் சாராயத்தையும் குடித்து முடித்தான்.

பின்னர் பைத்தியம் பிடித்த கொரில்லாக் குரங்கு இருக்கும் கூடாரத்தினுள் தடுமாறியபடி நுழைந்தான்.

அங்கே அவனுக்கும் அந்த கொரில்லாவுக்கும் ஒரு பயங்கரமான சண்டை நடந்தது. அந்த சண்டையில் அந்தக் கூடாரமே ஆட்டம் கண்டது. வேதனைக் கூக்குரல் விண்ணைப் பிளந்தது. அந்தக் கொரில்லாவின் உடம்பின் மேலுள்ள முடிக்கற்றைகள் பறந்து வந்து வெளியே விழுந்தன. மனிதக் காது ஒன்றுகூட வெளியில் வந்து விழுந்தது.

இந்தக் கூச்சலும் கூக்குரலும் இருபது நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அந்தக் கூடாரத்திலிருந்து இரத்தம் தோய்ந்த உடம்புடன் அந்த மாவீரன் தவழ்ந்து கொண்டே வெளியே வந்தான்.

தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று அந்த மன்னனைப் பார்த்துக் கேட்டான்.

'சரி. அரசே! இப்போது பல்வலியால் அவதிப்படும் அந்த ஆங்கிலேயப் பெண்மணி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா?' ..............!!!!!!!!

Friday, December 18, 2009

இணைய வேகம் சரிதானா? வாருங்கள் அளக்களாம்!

பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம்.

உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.

அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

Friday, December 4, 2009

சத்தம் போடாதே - பேசுகிறேன், பேசுகிறேன் என்...

முட்டை கட்லெட்

தேவையான பொருட்கள்:

முட்டை - 4
உருளை‌க் ‌கிழ‌ங்கு - 4
வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
தேங்காய்பால் - அரை கப்
மிளகுதூள் - 1 ‌சி‌றிது
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்
உ‌ப்பு - தேவையான அளவு

செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை த‌னி‌த்த‌னியாக வேகவைத்து தோல் ‌நீ‌க்‌கவு‌ம்.

ஒரு மு‌ட்டையை 2 பாகமாக அ‌ல்லது 4 பாகமாக வெ‌ட்டி வை‌‌க்க‌வு‌ம்.

கி‌ண்ண‌த்‌‌தி‌ல் ‌சி‌றிது ‌நீ‌ர் ‌‌வி‌ட்டு அ‌தி‌ல் உப்பு, மிளகு தூ‌ள் போட்டு கலக்கி, அ‌தி‌ல் வேகவை‌க்காத ஒரு மு‌ட்டையை உடை‌த்து அடி‌த்து வை‌‌க்கவு‌ம். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை ம‌சி‌த்து அ‌தி‌ல் தேங்காய் பால், வெங்காயம், மைதா, உ‌ப்பு, மசாலா, ‌மிளகா‌ய் தூ‌ள் போட்டு நன்கு பிசைந்து கொ‌ள்ளவு‌ம்.

அ‌ந்த மாவை ‌சி‌றிது எடு‌த்து கையில் வட்டமாகத் தட்டி நடுவில் வெ‌ட்டி வை‌த்து‌ள்ள ஒரு பா‌தி முட்டையை வைத்து மாவை மூட வேண்டும்.

இதனை முட்டை கலவை‌யில் நனைத்து ரொட்டி தூளில் ‌பிர‌ட்டி தவா‌‌வி‌‌ல் போ‌ட்டோ அ‌ல்லது எ‌ண்ண‌ெ‌‌யி‌ல் பொ‌ரி‌த்தோ எடு‌க்கலா‌ம் மு‌ட்டை க‌ட்லெ‌ட் தயா‌ர்.

உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம் தரு‌ம் ‌சில ‌விஷய‌ங்க‌ள்

கா‌ய்க‌றிகளை ந‌ன்கு சமை‌த்து சா‌ப்‌பிடுவது ‌மிகவு‌ம் தவறு. பல கா‌ய்க‌றிகளை ப‌ச்சையாகவே சா‌ப்‌பிடலா‌ம். ‌சிலவ‌ற்றை ம‌ட்டு‌ம்தா‌ன் சமை‌த்து சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம்.

ப‌ச்சை ‌மிளகாயாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, கா‌ய்‌ந்த ‌மிளகாயாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி அ‌திக‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ல்ச‌ர் உ‌ள்ளவ‌ர்க‌‌ள் உண‌வி‌ல் நெ‌ய் சே‌ர்‌த்து சா‌ப்‌பிடலா‌ம். உரு‌க்‌கிய நெ‌ய்தா‌ன் உடலு‌க்கு ந‌ல்லது. கெ‌ட்டியான நெ‌ய் உடலு‌க்கு கெடுத‌ல், அது கொழு‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம்.

பசுமா‌ட்டு நெ‌ய் உடலு‌க்கு எ‌ந்த கெடுதலு‌ம் ஏ‌ற்படு‌த்தாது உட‌ல் எடையையு‌ம் கூ‌ட்டாது. ஆனா‌ல் எருமை பா‌லி‌ல் எடு‌த்த நெ‌ய் அ‌திக கொழு‌ப்பு ‌நிறை‌ந்தது. உட‌ல் எடை கூட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பவ‌ர்க‌ள் எருமை நெ‌ய்யை சா‌ப்‌பிடலா‌ம்.

உடலு‌க்கு‌ள் ஏ‌ற்படு‌ம் அனை‌த்து ‌வியா‌திகளையு‌ம் யோகாவா‌ல் ச‌ரி செ‌ய்ய முடியு‌ம். ஆனா‌ல் ‌விப‌த்துகளா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளை ச‌ரி செ‌ய்ய முடியாது. அதே சமய‌ம் ‌விப‌த்‌தினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட கைகளை ச‌ரியாக இய‌க்க ஆசன‌ங்க‌ள் பய‌ன்படு‌ம்.

Wednesday, December 2, 2009

ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ்...

இலவசமாகக் கிடைப்பதில் ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பு தான் பிரபலமானது. இலவசம் மட்டுமின்றி அவ்வப்போது அப்டேட் செய்யப் படுவதும் அதனால் அவ்வப்போது வரும் வைரஸ்களை நீக்குவதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளில் இலவசமாகக் கிடைப்பதில் ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்புதான் பிரபலமானது. இலவசம் மட்டுமின்றி அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவதும் அதனால் அவ்வப்போது வரும் வைரஸ்களை நீக்குவதிலும் சிறப்பாகச் செயல்படுவதிலும் இது பெயர் பெற்றதாகும். இதன் புதிய பதிப்பு 8 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. நம்மில் பலரும் வீட்டு கம்ப்யூட்டர்களிலும் அலுவலக பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் ஏவிஜி தொகுப்பைப் பயன்படுத்துவதால் இந்த புதிய பதிப்பின் கூடுதல் வசதிகள் குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.

அண்மைக் காலம் வரை கடந்த ஓராண்டாக பதிப்பு 7.5 பயன்படுத்தப்பட்டு வந்தது. இடையே பதிப்பு 8 வந்துள்ளது; அப்டேட் செய்யவில்லையா ? என்று ஒரு அறிவிப்பு வந்தது. இதனை ஒருவேளை பணம் கட்டி வாங்க வேண்டுமோ என்ற எண்ணத்துடன் குறிப்பிட்ட தளம் நுழைந்தால் அது அப்டேட்டட் புதிய பதிப்பு எனத் தெரிந்தது. நீங்கள் 7.5 அல்லது முந்தைய பதிப் பினைப் பயன் படுத் துபவராக இருந்தால் உடனே பதிப்பு 8க்கு மாறிக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஜூன் மாதத்திற்குப் பின் 7.5 பதிப்பிற்கான உதவிக் குறிப்புகள் கிடைக்காது. புதிய பதிப்பினைப் பெற http://free.grisoft.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு Free Edition என்பதில் சரியாகக் கிளிக் செய்திடுங்கள். வரிசையாக அங்கு தரப்பட்டிருக்கும் வழிகளின் படி சென்று உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்திடுங்கள். டவுண் லோட் செய்து முடித்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் டாஸ்க் பாரில் கடிகாரத்திற்கு அருகில் நான்கு வண்ணங்களிலான ஒரு சதுரம் இருக்கும்.

அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு வில் “Quit AVG free control center” என்பதில் கிளிக் செய்திடுங்கள். உடனே ஒரு எச்சரிக்கை செய்தியில் வெளி யேறப் போகிறீர்களா? என்று தரப்படும். அதில் யெஸ் கொடுத்து வெளியேற வும். இனி இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம் களையும் நிறுத்தவும். அடுத்து நீங்கள் டவுண்லோட் செய்த ஏவிஜி அப்ளிகேஷன் பைலை இருமுறை கிளிக் செய்திடுங்கள். இனி இலவச இன்ஸ்டலேஷன் தொடங்கும். இம்முறை என்ன சிறப்பு என்றால் இதுவே முன்பு இன்ஸ்டால் செய்த பழைய ஏவிஜி தொகுப்பினை நீக்கிவிடும்.

இனி இன்ஸ்டாலேஷன் வழிகளை நெக்ஸ்ட் அழுத்திப் பின்பற்றவும். இறுதியில் அப்டேட் செய்யப் போகிறேன் என்று சொல்லி இணைய த்தை நாடும் செயல் மேற்கொள்ள ப்படும். இறுதியில் அப்டேட்டிங் பெய்ல்டு என்று செய்தி வரும். கவலைப் பட வேண்டும். ஓகே கிளிக் செய்து வெளியேற முயற்சிக் கவும். இப்போது கம்ப்யூ ட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடச் சொல்லி செய்தி கிடைக்கும். யெஸ் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ரீ ஸ்டார்ட் ஆகி ஏவிஜியின் புதிய பதிப்பு செயல்படத் தொடங்கும். இனி அடுத்த வேலை அப்டேட் செய்திடும் வேலை. முதலில் பெய்ல்டு என்று வந்ததல்லவா? அந்தப் பணியை இப்போது மேற்கொள்ளலாம். இப்போது ஏவிஜி ஐகானில் ஒரு சிறிய சிகப்பு எக்ஸ் அடையாளம் இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் வரும் மெனுவில் அப்டேட் செய்திட ஆப்ஷன் கொடுங்கள். இனி இந்த புதிய பதிப்பு அப்டேட் செய்யப்படும். உங்கள் கம்ப்யூட்டரிலும் செயல்படும்.

8.A. யு.எஸ்.பி. எஜெக்டர்

பிளாஷ் டிரைவ்களைப் பயன்படுத்தாத நாள் இல்லை. யு.எஸ்.பி. போர்ட்டில் பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தாமல் நம் கம்ப்யூட்டர் பயன்பாடு நிறைவடைவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதற்கான ஐகானை கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் குறிப்பிட்ட சாதனத்தைத் தேர்ந்தெடுத்து பின் ஸ்டாப் அழுத்தி Safely Remove Hardware என்று செய்தி வந்தவுடன் போர்ட்டில் உள்ள சாதனத்தை வெளியே எடுக்கிறோம். அது பிளாஷ் டிரைவாகவோ, ஐபாட் சாதனமாகவோ, டிஜிட்டல் கேமராவாகவோ அல்லது மொபைல் போனாகவோ இருக்கலாம். இந்த சுற்று வழி செல்லும் சிரமத்தைப் போக்குவதற்காக யு.எஸ்.பி. எஜெக்டர் என்னும் புரோகிராம் இணைய தளத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராம் என்ன செய்கிறது? போர்ட்டில் இணைத்துள்ள எந்த ஒரு சாதனைத்தையும் விரைவாக வெளியே எடுத்திட துணை புரிகிறது.

முதலில் இது பென் டிரைவ்களுக்கு மட்டுமே இயங்கியது. இப்போது யு.எஸ்.பி. டிரைவில் இணைக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் இயங்கி வருகிறது. இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால் டிரைவில் இணைத்துள்ள எந்த சாதனத்தையும் டபுள் கிளிக் அல்லது என்டர் தட்டி உடனே எடுத்துவிடலாம். பலர் ஏற்கனவே எக்ஸ்பி தரும் வசதிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அது எளிதுதானே என எண்ணலாம். ஆனால் விரைவாகச் செயல்பட இதுவே சரியான புரோகிராம் ஆக உள்ளது. இந்த புரோகிராமினை http://quick.mixnmojo.com/usbdiskejector என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம்.

மெருகு பெறும் பயர்பாக்ஸ்

தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு போட்டியாக இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், பல புதிய வழிகளில் மேம்பாடு அடைய உள்ளது. மொஸில்லா தன் இணைய தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் இரண்டு நிலைகளில் ஏற்படுத்தப் படும். முதல் நிலை மாற்றங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 3.7ல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தரப்படும். மற்ற மாற்றங்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் தொகுப்பு 4ல் ஏற்படுத்தப்படும்.

பிரவுசர்களுக்கிடையேயான போட்டியில் தன் பயர்பாக்ஸ் நல்லதொரு இடத்தைப் பிடித்து வருவதனை மொஸில்லா நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி பல வசதிகளைத் தொடர்ந்து சேர்த்து வழங்கி வருகிறது.

தற்போதைய பயர்பாக்ஸ் முகப்பு தோற்றம் மிகப் பழமையாக இருப்பதாக மொஸில்லா எண்ணுகிறது. முகப்பு தோற்றத்தில், விஸ்டா தொகுப்பில் வந்த கிளாஸ் ஸ்டைலில் முதல் மாற்றம் இருக்கும் Page மற்றும் Tools என இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளதாக மெனு மாற்றி அமைக்கப்படும். Stop மற்றும் Reload ஆகிய இரண்டும் ஒரே பட்டனில் தரப்படும். மெனு பார் மறைக்கப்பட்டு ரிப்பன் ஸ்டைல் மெனு தரப்படும் என முன்பு அறிவித்தபோது பலத்த எதிர்ப்பு இருந்ததால், அதனைக் கைவிட்டுவிட்டது மொஸில்லா.

அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பார் ஒரே கட்டத்தில் தரப்படும். ஸ்டேட்டஸ் பார் எடுக்கப்படும். இவை எல்லாம் குரோம் பிரவுசர் போல தோற்றத்தைத் தருவதற்கான முயற்சிகள் என்று சிலர் கூறிய போது, மொஸில்லா அதனை வன்மையாக மறுத்து பயர்பாக்ஸ் எப்போதும் பயர்பாக்ஸ் போலத்தான் தோற்றமளிக்கும் எனக் கூறப்பட்டது.

அனைத்து பிரவுசர்களும் ஒரே மாதிரியான வேலையை மேற்கொள்வதால், சில வேளைகளில் இவை ஒன்றுக்கொன்று மற்றதைக் காப்பி செய்வது போலத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென்று ஒரு தனித் தோற்றத்தைக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது.

பிரவுசர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியில், இன்னும் இன்டர்நெட் தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை யைக் காட்டிலும் கூடுதலானவர்கள் பயர்பாக்ஸினைப் பயன்படுத்துகின்றனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பலர் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவியதற்கு முக்கிய காரணம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல இடங்கள் ஹேக்கர்களுக்குச் சாதகமாக இருந்ததுதான். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்திடும் ஸென்ஸிக் என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் ஹேக்கர்கள் காணும் பலவீனமான இடங்களைக் கொண்டிருப்பதில் முதல் இடம் பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன் பாதுகாப்பற்ற தன்மை 44 சதவீதம், சபாரி 35சதவீதம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 15சதவீதம் என அறிவித்துள்ளனர். இந்த ஆய்வின் நம்பகத் தன்மை இப்போது கேள்விக் குறியாகி இருந்தாலும், பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்ளும் ப்ளக் இன் புரோகிராம்கள்தான் இந்த பாதுகாப்பற்ற தன்மையினைத் தருவதாக தெரியவந்துள்ளது. ஆனால், பயர்பாக்ஸ் உடனே தன் பிரவுசரில் இருந்த பலவீனமான இடங்களைச் சரி செய்துவிட்டது.

பயர்பாக்ஸ் 3.6 பீட்டா 2

பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், இதன் பதிப்பு 3.5 னைத்தான் அதிகமாகப் பயன்படுத்து கின்றனர் என்றாலும், பலரும் ரிஸ்க் எடுத்து பயர்பாக்ஸ் 3.6 சோதனைத் தொகுப்பினையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கான சோதனைத் தொகுப்பு 2 அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 190 பிரச்னைகள் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்ற வாரம் வெளியான பயர்பாக்ஸ் 3.6 சோதனை பதிப்பு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் சில புதிய வசதிகளுக்கு இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏரோ பீக், டாஸ்க்பார் தம்ப்நெயில் பிரிவியூ போன்றவற்றை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். ஆனால் விண்டோஸ் 7 தரும் ஜம்ப் லிஸ்ட்டின் வசதிகள் பயர்பாக்ஸ் பதிப்பில் இல்லை.
குறிப்பாக இதனுடன் இயங்க முடியாமல் இருக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களால், பயர்பாக்ஸ் கிராஷ் ஆவது தடுக்கப்பட்டுள்ளது.

பிரவுசரின் தோற்றத்தினை பயன்படுத்துபவர்கள் எளிதில் மாற்ற பெர்சனா என்ற டூலை மொஸில்லா வழங்கியது. இந்த தொகுப்பில் இன்னும் பல ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன. இப்போது பெர்சனாவில் ஒரே கிளிக் செய்வதன் மூலம் பயர்பாக்ஸ் தோற்றத்தினை மாற்றுவதற்கு வழி தரப்பட்டுள்ளது. வீடியோக்களை இயக்குகையில் முழு திரையிலும் பார்க்க வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்து பவர்களுக்கு, பழசாகிப் போன, பயன்படுத்த முடியாத ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகள் புதிய பிரவுசர் தொகுப்பிற்கு ஏற்றவைதானா என்று அறிய ஆட் ஆன் கம்பாடிபிளிட்டி ரீடர் என்னும் புரோகிராம் டவுண்லோட் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது. கம்ப்யூட்டரிலிருந்து பைலை பிரவுசரின் அட்ரஸ் பாரில் போட்டு திறக்க வழி செய்யப்பட்டுள்ளது.

மொஸில்லா என்ன செய்ய வேண்டும் என்பதனை கூகுள் தந்த குரோம் பிரவுசர் சுட்டிக் காட்டியது. அதே போல குரோம் பிரவுசரில் இருந்த புதிய வசதிகளை பயர்பாக்ஸ் தரத் தொடங்கியது. பிரவுசர் யுத்தத்தில் பயர்பாக்ஸ், குரோம் பிரவுசரை எதிர் கொண்டாலும், ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டினையே மேற்கொண்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. எச்.டி.எம்.எல். வசதியை புரோகிராமிங் மற்றும் டிஸ்பிளேவுக்கான வலிமையான சாதனமாகக் கொண்டு வருவதில் இரண்டும் செயல்படுகின்றன.

பயர்பாக்ஸ் 3.7 அடுத்த 2010 ஆம் ஆண்டின் நடுவிலும், பதிப்பு 4 அடுத்து ஒரு ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாகப் புதிய வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.