தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


விண் ஆம்ப் 5.541

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருக்கும் சொல்லத் தேவையில்லாத தகவல் விண் ஆம்ப். பாட்டுக்களை கேட்டு ரசிப்பதற்கும் வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழவும் இலவசமாகக் கிடைக்கும் விண் ஆம்ப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இதன் புதிய பதிப்பு விண் ஆம்ப் 5.541 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. விண் ஆம்ப் வரத் தொடங்கிய பின் இது 35 ஆவது முறையாக மேம்படுத்தப்பட்ட தொகுப்பாகும்.
Read more »

Labels:

மவுஸ் இயங்க மறுக்கையயில்....

உங்கள் மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம்; அல்லது பட்டன்கள் கிளிக் செய்தாலும் எந்த வித செயலும் இன்றி சும்மா இருக்கலாம். இதனால் நாம் மவுஸை எடுத்து மீண்டும் கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்ப்போம். புதிய யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து வேலை செய்கிறதா எனச் சோதனை செய்திடுவோம். அல்லது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுவோம்.

அப்படியும் மவுஸ் எனக்கென்ன என்று இருந்தால் நம் பொறுமை எல்லை மீறிப்போய் மவுஸை தூக்கி எறியும் அளவிற்குச் சென்று விடும். ஆனால் கம்ப்யூட்டரை இயக்க வேண்டுமே. என்னதான் தீர்வு? என எண்ணுகிறீர்களா? இதோ விண்டோஸ் அதற்கான வழிகளைத் தந்துள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நம்லாக் கீ பேட் உங்களுக்கு மவுஸாக துணை புரியும் வகையில் செட் செய்திடலாம். அந்த வழிகளைப் பார்ப்போமா!

முதலில் ஆல்ட்+ஷிப்ட்+நம்லாக் கீகளை (Alt+Shift+NumLock) அழுத்துங்கள். ஒரு சிறிய மவுஸ் கீ விண்டோ கிடைக்கும். மவுஸ் கீகளை இயக்க நிலையில் வைக்க விரும்பினால் ஓகே கிளிக் செய்திடுங்கள்.

மவுஸ் கர்சர் குறித்த டீடெய்ல்ஸ் தகவல்களைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றால் Settings பட்டனில் கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கர்சர் ஸ்பீட் மற்றும் பலவற்றை இதில் செட் செய்திடலாம். செட் செய்து முடித்தவுடன் கீழ்க்காணும் வகையில் உங்கள் நம்லாக் பேட் மவுஸாகச் செயல்படும்; அல்லது நீங்கள் செயல்படுத்தலாம்.

* 1,2,3,4,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சர் செல்லும் திசையை நிர்ணயிக்கும்.

* 5 ஆம் எண்ணுக்கான கீ மவுஸ் கிளிக் பட்டனாகச் செயல்படும்.

* இன்ஸெர்ட் கீ மவுஸ் கிளிக் பட்டனாக இயங்கும்.

* + கீ ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திட பயன்படும்.

* டெலீட் பட்டன் மவுஸை ரிலீஸ் செய்திட பயன்படும்.

நம்பர் கீ பேட் மவுஸுக்குப் பதிலாக இயங்குவதை நிறுத்த நம்லாக் பட்டனைத் தட்டவும்

Labels:

லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?

நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப் கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும் உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக் கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல் லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.

2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம். இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது.

மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம். பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.

5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்.

Labels:

பூமியிலேயே பொன்னுலகம்


தத்துவ மேதைகள் இதுவரை உலகை வர்ணனை தான் செய்திருக்கிறார்கள்.நாம் இனி அந்த உலகை மாற்ற வேண்டும்.

"இதுவரை பூசாரிகளும் மதத்தலைவர்களும் உங்களுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் சொர்க்கத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் நான் காட்டும் வழி உங்களை பூமியிலேயே பொன்னுலகம் அடைய வைக்கும்…..
வாழ்க்கை என்பது அறிவால் நிர்ணயிக்கபடுவது அல்ல.. உங்கள் அறிவு நீங்கள் வாழும் வாழ்க்கையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது."

ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக்கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்." (மூலதனம், தொகுதி 1, அத்தியாயம் 7)

Labels: ,

ரூசோவின் சிந்தனைகள்

தனது குற்றங்களை மறந்து, பிறரின் உள்ளத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது தவறு.

ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும்.

Labels: ,

பொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை

அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு கு‌ளி‌த்து வ‌ந்தா‌ல் பொடுகு நீங்கு‌ம்.

சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தா‌ல் ந‌ல்ல‌து.

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுட‌ன் கண்டிஷனராகவும் இரு‌க்கு‌ம்.

இ‌தி‌ல் ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள். நீங்களும் அழகுடன் திகழ்வீர்கள்.

Labels: