தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


மறக்க முடியாத மனிதர்கள் – தமிழருவி மணியன்

அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.

தியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாய் போற்றப்பட்டன.

தம்மிடம் இருப்பதை இழப்பதற்காகவே அன்று அரியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைத்தனர்.  இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிக் கொடுப்பதற்காகவே பல பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலர் வருகின்றனர்.

Read more »

Labels:

விவசாயிகளுக்கு தக்க சமயத்தில் உதவும் நண்பன் ''சௌசௌ''

ஏலக்காய், மிளகு, வாழை, கொய்மலர் என்று இடத்துக்கு ஏற்ப மலைப்பிரதேசங்களில் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலான மலைத்தோட்ட விவசாயிகளுக்கு தக்க சமயத்தில் உதவும் நண்பனாக இருப்பது 'சௌசௌ' காய்தான்.

ஒரு ஏக்கர் நிலமும், தண்ணீர் வசதியும் இருந்தால் நடவு செய்த நான்காவது மாதத்திலிருந்து வாரம்தோறும் வருமானம் பார்க்கலாம்.  நோய் தாக்குதல் அதிகம் இருக்காது என்பதோடு, மலைத்தோட்டப் பயிர்களில் அதிக பராமரிப்பு தேவைப்படாத ஒன்றாக இருப்பதாலும் முக்கியப் பயிராக விளங்குகிறது சௌசௌ.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிகுடி, ஆடலூர், பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.  
Read more »

Labels:

குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த பெண்களுக்கான தொழில்கள்!!

வீட்டு வேலைகளில் இருந்து விண்வெளிக்கு செல்லும் வேலை வரை இன்று பெண்கள் இல்லாத துறைகளே கிடையாது என்றாகி விட்டது.  ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து தொழில்களையும் செய்து வருகின்றனர்.  ஓடியாடி செய்யும் தொழில்களை விட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். 

பெண்கள் என்னென்ன வேலைகளை செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.  அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.  தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தை பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர் வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.
Read more »

Labels:

தேனீ வளர்ப்பு!! (bees make)

தேனில் (honey) சுவை அதிகமாக இருப்பதோடு, அதில் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன.  உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் (honey) இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது.  இதனால் தேனின் விலையும் மற்ற பொருட்களின் விலையை விட சற்று அதிகம்தான்.  இந்த தேனீயை (bees) வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

விவசாயிகள் மட்டுமல்லாது மாணவர்கள் (students), இளைஞர்கள் (youth), சுயதவிக்குழுக்கள், ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.

இதற்கு தேனெடுக்கும் கருவி, புகைப்பான், முகமூடி தலைக்கவசம், கத்தி, ஸ்டாண்ட், கையுறைகள் போன்றவைதான் உபகரணங்கள்.  தேன் பெட்டிகளை மரத்தில்தான் செய்யவேண்டும்.  குறிப்பாக புன்னை மரத்தில் செய்வது மிகவும் நல்லது.
Read more »

Labels: