Followers

Sunday, November 22, 2009

கடவுள்


நேர்மையான மனம் படைத்தவனுக்குச் சட்டந்தான் கடவுள்; முட்டாளுக்குக் கேளிக்கைதான் கடவுள்.

சத்தியந்தான் கடவுள். ஒளிதான் அவரது நிழல்.

கடவுள் ஒரு சேட்த்திரக் கணிதர்.

அவர் உலகத்தைச் சிருஷ்டித்தது போலவே, அவருடைய உலக பரிபாலனமும் க்ஷேத்திர கணித நுட்பமுள்ளது.

கடவுள் மாயாஜால வித்தைக்காரர் அல்லர். நினைத்தபடியெல்லாம் விதவிதமான உருவங்களில் அவதாரங்கள் எடுக்க மாட்டார். அவர் என்றென்றும் ஒரே மாதிரி இருப்பவர்.

கடவுளானவர் சொல்லிலும் செயலிலும் பரிபூரண எளிமையுள்ளவர்; மெய்மையானவர்; அவர் உருவம் மாறுவதில்லை; அவதாரங்கள் எடுப்பதில்லை; அசரீரி வாக்காலோ, தெய்வீக சமிக்ஞைகளாலோ, கனவில் வந்தோ நனவில் நடந்தோ யாரையும் ஏமாற்றுவதில்லை; அவர் மாயாவி அல்லர்; மாய ரூபங்கள் எடுத்து மனித ஜாதியை ஏமாற்றுவதில்லை.

Friday, November 20, 2009

ஆவாரையின் மருத்துவ குணங்கள்!

ஆவாரை ‌பி‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், வாத‌த்‌தி‌ற்கு‌ம் அரு‌மரு‌ந்தாகு‌ம்.

ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும். இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும்.

பாலில் கலந்து உண்ண வாதம் தீரும். வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும். அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும்.

நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும். கஞ்சியுட‌ன் சே‌ர்‌த்து உண்ண மயக்கம் தீரும். வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும்.

ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்.

Monday, November 16, 2009

Friday, November 13, 2009

வ‌யி‌ற்‌‌றி‌ன் ந‌ண்ப‌ன் தே‌ன்

வ‌யி‌‌ற்‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் பு‌ண், அழ‌ற்‌‌சி, ஈர‌ல், ‌பி‌த்த‌ப்பை நோ‌ய்க‌ள் அனை‌த்து‌க்கு‌ம் மரு‌ந்தாக தே‌ன் அமை‌ந்து‌ள்ளது. அதனா‌ல்தா‌ன் வ‌யி‌ற்‌றி‌ன் ந‌ண்ப‌ன் தே‌ன் எ‌ன்‌கிறோ‌ம்.

ஒன்று முதல் மூன்று தே‌க்கர‌ண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வே‌ண்டு‌ம்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.

மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

கண் பார்வைக்கு ஜாதிக்காய்

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.

மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.