தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


poovallan kettu par (irava_pagala)Tamil song

Labels:

Sachien - Tamil Comedy Scene

Labels:

நோய் எதிர்ப்புக்கு நெல்லிக்காய்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.

நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

நெ‌ல்‌லி‌க்கா‌ய் ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்.

Labels:

புகைப்படங்கள்

Labels:

கண்ணை உறுத்துதா டெஸ்க்டாப் ?

ஆக்டிவ் டைட்டில் பார் – சைஸ் அளவை 21க்கு மாற்றவும். கலர் 1 மற்றும் கலர் 2 – எந்த வண்ணம் உங்கள் கண்களுக்கு உறுத்தாமல் கிளேர் அடிக்காமல் இருக்குமோ அந்த வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும். டிஸ்பிளே செட்டிங்ஸ் குறித்து சென்ற வாரம் வெளியிடப்பட்ட கட்டுரையைப் படித்த பின் பல வாசகர்கள் தங்கள் கம்ப்யூட்டர் திரை புது ஜொலிப்புடன் இருப்பதாக எழுதி உள்ளனர். ஆனால் பலர் தங்கள் மானிட்டரில் உள்ள சில வண்ணங்கள் கண்களை உறுத்துவதாகவும் அதனை எப்படி மாற்றுவது என்றும் கேட்டுள்ளனர். ஒரு சிலர் எழுத்துக்கள் சிறியதாக இருப்பதாகவும் ஏற்கனவே கண்ணாடி அணிந்தவர்களுக்கும் இது தொல்லை தருவதாகவும் எழுதி உள்ளனர். இவர்களுக்கான தகவல் குறிப்புகள் இதோ:

கீழே தரப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் ஒரு முறை நீங்கள் டெஸ்க்டாப் செட் செய்துவிட்டால் பின் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது.

1. முதலில் கிளாசிக் ஸ்டார்ட் மெனுவிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து பின் புராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும்.

2. பின் ஸ்டார்ட் மெனு டேப்பில் கிளாசிக் ஸ்டார்ட் மெனு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. ஓகே கிளிக் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பி தோற்றத்திலிருந்து விண்டோஸ் கிளாசிக் தோற்றத்திற்கு மாற்றிட:

1. டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் (ஷார்ட் கட்களை விட்டுவிடுங்கள்) ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

2. டிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோவில் தீம்ஸ் டேப் சென்று அதில் விண்டோஸ் கிளாசிக் என்ற தீமைத் தேர்ந்தெடுக்கவும்.

3. அடுத்து அப்பியரன்ஸ் டேப் செல்லவும். அதில் அட்வான்ஸ்டு பட்டனில் கிளிக் செய்திடவும்.

4. அட்வான்ஸ் அப்பியரன்ஸ் விண்டோவில் ஆக்டிவ் விண்டோ என்ற டெக்ஸ்ட்டில் கிளிக் செய்திடவும். இனி கீழ்க்காணும் மாற்றங்களை மேற்கொள்ளவும்.

ஆக்டிவ் டைட்டில் பார் – சைஸ் அளவை 21க்கு மாற்றவும்.

கலர் 1 மற்றும் கலர் 2 – எந்த வண்ணம் உங்கள் கண்களுக்கு உறுத்தாமல் கிளேர் அடிக்காமல் இருக்குமோ அந்த வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

பாண்ட் டைப்: டகோமா என்ற பாண்ட்டை தேர்ந்தெடுக்கவும். இது படிப்பதற்கு எளிதாக இருக்கும். இதன் சைஸ் 12 எனத் தேர்ந்தெடுக்கவும். ( இந்த அளவு உங்களுக்குச் சிறியதாகத் தோன்றினால் இன்னும் கொஞ்சம் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.) இதன் கலர் என்பதில் கருப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

5. அடுத்த நார்மல் என்று இருக்கும் பட்டையில் உள்ள டெக்ஸ்ட் மீது கிளிக் செய்திடவும். இதில் கீழ்க்காணும் மாற்றங்களை மேற்கொள்ளவும்:

மெனு: சைஸ் 21 தேர்ந்தெடுக்கவும். கலர் 1 – என்பதில் கிரே கலரை செலக்ட் செய்திடுங்கள்.

பாண்ட் டைப்: இதில் ஏரியல் என்ற எழுத்தை தேர்ந்தெடுக்கவும். (இந்த எழுத்துவகையும் படிப்பதற்கு எளிதாக கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் இருக்கும்.) சைஸ் 12 ஆகவும் கலர் கருப்பாகவும் இருக்கட்டும்.

அடுத்து மெசேஜ் டெக்ஸ்ட் என்பதில் உள்ள டெக்ஸ்ட்டில் கிளிக் செய்திடவும்.  மெனு சைஸை 21க்கு அமைக்கவும். இறுதியாக விண்டோஸ் டெக்ஸ்ட் என்பதில் உள்ள டெக்ஸ்ட்டில் கிளிக் செய்து கீழ்க்காணும் மாற்றங்களை ஏற்படுத்தவும்.

கலர் 1: இதில் அதர் என்பதில் கிளிக் செய்திடுங்கள். நான் இள மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுத்தேன். உங்களுக்கு இதமான வண்ணமாக நீங்கள் தேர்ந்தெடுக்கவும்.

பேசிக் கலர்ஸ்: இதில் கறுப்பான அல்லது இருட்டான தோற்றத்தினை சிறிது குறைத்துக் காட்டுவதற்காக மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு படத்தில் உள்ளது போல ஸ்கிரீன் தோற்றத்தில் வலது பக்கத்தில் இடது புறமாகச் சாய்ந்த அம்புக்குறியினைப் பார்த்தீர்களா? இந்த அம்புக் குறியில் கிளிக் செய்து அப்படியே மேலேயும் கீழேயும் இழுக்கவும். எந்த இடத்தில் உள்ள மஞ்சள் நிறம் கண்களுக்கு இதமாக இருக்கிறதோ அந்த இடத்தில் நிறுத்தவும்.

உங்களுக்கு இருட்டாக இருப்பதே இதம் என்றால் அம்புக் குறியை கீழே கீழே கொண்டு வரவும். ஓகே, இந்த செலக்ஷனை முடித்தபின் மீண்டும் தீம் டேபிற் குச் செலவும். சேவ் அஸ் பட்டனைக் கிளிக் செய்து பின் சேவ் பட்டனை கிளிக் செய்திடவும். அடுத்து விண்டோஸ் நீங்கள் மேற்கொண்ட மாற் றங்களை அமல்படுத்தும் வரை காத்திருக்கவும்.

இப்போது மாற்றங்களை அமைத்தாயிற்று. இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலானா செட்டிங்ஸோடு புதிய தோற்றத்தில் விண்டோஸ் உங்களுக்குக் காட்சி அளிக்கும்.

Labels:

கூகுள் தரும் புதிய வசதிகள்

வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து விடுதலை பெறுங்கள்.

கூகுள் மெயில் அண்மைக் காலமாக சில புதிய வசதிகளைத் தந்துள்ளது. இவற்றை ஒரு சிலரே கவனித்துப் பயன்படுத்தி வருகின்றனர். பலருக்கு இது போன்று வசதிகள் உள்ளன என்று தெரிய வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். சிலர் பயன்படுத்தி வந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள இந்த வசதிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

* வண்ண லேபிள்கள் (Colored labels) : இந்த வண்ண லேபிள்கள் மூலம் உங்களுக்கான இமெயில்களை வகைப் படுத்த வசதியாக இருக்கும். ஒவ்வொரு லேபிள் பக்கத்தில் இருக்கும் கலர் பட்டி மீது கிளிக் செய்து ஒவ்வொரு மெயிலுக்கும் வண்ண லேபிள்களைக் கொடுங்கள்.

* குரூப் சாட்டிங் (Group chat) : சாட்டிங் எனப்படும் அரட்டையில் பலருடன் பேச வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்டோவினைத் திறந்து பேச வேண்டும். இப்போது இந்த சிரமம் களையப்பட்டு ஒரே விண்டோவில் அனைவருடன் பேசும் வசதி தரப்படுகிறது. இது போன்ற ஒரு குரூப் சேட்டிங் தொடங்க சாட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஆப்ஷன்ஸ் மெனுவிலிருந்து குரூப் சேட் என்பதனை கிளிக் செய்திடவும். அடுத்தடுத்து வருபவை எல்லாம் ஒரே விண்டோவில் கிடைக்கும்.

* புதிய எமோட்டிகான்கள் (emoticons) : உங்கள் உணர்வுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்த பல புதிய எமோட்டிகான்கள் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்துங்கள். வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து விடுதலை பெறுங்கள்.

* இலவச ஐ–மேப் வசதி (Free IMAP) : இதன் மூலம் உங்கள் இன் – பாக்ஸில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்தினாலும் அது நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைகிறது. மொபைல் போன் வழியே இன் – பாக்ஸ் பார்த்தாலும் டெஸ்க் டாப் வழி யேபார்த்தாலும் இந்த மாற்றங்கள் காட்டப்படுகின்றன.

* மற்ற அக்கவுண்ட் இமெயில்கள்: உங்களுக்கு உள்ள வேறு இமெயில் அக்கவுண்ட்டுகளுக்கு வரும் இமெயில் கடிதங்களை கூகுள் மெயிலில் இருந்தே பெற்றுப் பார்க்கலாம். இது போல ஐந்து வேறு வேறு இமெயில் அக்கவுண்ட்களைப் பார்க்க கூகுள் மெயில் அனுமதிக்கிறது.

அவை அனைத்தும் கூகுள் மெயில் அக்கவுண்ட்டிலேயே வைத்துக் கொள்ளவும் செய்கிறது. இவற்றிற்குப் பதிலளிக்க வேண்டுமாயின் அதற்கெனவே தனி ‘from’ address   வடிவமைத்துத் தருகிறது. இதனால் பதில் கூகுள் தளத்திலிருந்து வருகிறது என்று அதனைப் பெறுபவர்களுக்குத் தெரியாது. ஆனால் வேறு இமெயில் அக்கவுண்ட்டுகள் அதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட அக்கவுண்ட்டாக இருக்க வேண்டும். வெப் சர்வரிலேயே வைத்துப் பார்க்கும்படியானதாக இருக்கக் கூடாது.

Labels:

அசைக்க முடியாத பாஸ்வேர்ட் அமைக்கலாம்

ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.  எப்படிப்பட்ட திருடனும் அசைக்க முடியாத பாஸ்வேர்டை நீங்கள் அமைக்கிறீர்களா? இந்த கேள்விக்கு பலர் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள். ஏனென்றால் பலர் பாஸ்வேர்ட் அமைக்கையில் பெரும்பாலும் நமக்குப் பிடித்தவர்களின் பெயர், குழந்தைகளின் பெயர், குடும்பத்திலுள்ளவர்களின் பெயர், ஊர் பெயர் ஆகியவற்றுடன் பிறந்த நாள் அல்லது திருமண நாள் ஆகியவற்றை இணைத்து வைக்கிறார்கள். இது யாராலும் அனுமானம் செய்யக் கூடியது என்பதனை மறந்துவிடுகிறார்கள். அல்லது செல்லப் பெயர் வைப்பது போல மிகச் சிறியதாக வைக்கிறார்கள். இந்த முறைகள் எல்லாம் நம் பாஸ்வேர்டை எப்படியாவது கண்டு நம் பெர்சனல் தகவல்களைத் திருட முயற்சிப்பவர்களுக்கு எளிதாக வழி வகைக்கும் செயல்களாகும்.

ஒரு பாஸ்வேர்டினை எப்படி யாரும் தெரிந்து கொள்ள முடியாதபடி அமைக்கலாம் என்பதனையும் ஒரு பாஸ்வேர்ட் அமைப்பதில் என்ன என்ன கடைப்பிடிக்க வேண்டும், எவற்றையெல்லாம் பின்பற்றக் கூடாது என்பதனையும் இங்கு பார்க்கலாம்.

1. ஒரு பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டர்களில் அமைக்கப்பட வேண்டும். மிக உறுதியானதாக வேண்டும் என்றால் 14 கேரக்டர்களில் அமைய வேண்டும். இது எந்த வகையிலும் தொடர்ச்சியானதாக இருக்கக் கூடாது.

பாஸ்வேர்டை ஒரு சொல்லில் அமைப்பதைக் காட்டிலும் இரண்டு சொற்கள் அடங்கிய ஒரு சொல் தொடராக ("pass phrase")  அமைப்பது இன்னும் நல்லது. இதனை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். நமக்கும் மனதில் வைத்திருப்பது எளிது.  rendu idli  என்று வைத்தால் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.

2. எழுத்துகள், எண்கள் மற்றும் அடையாளக் குறிகள் (*&%#@) ஆகிய மூன்று வகைகளையும் இணைத்து உருவாக்குவது நல்லது. இதுவே 15 கேரக்டர்களில் அமைந்தால் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கும். சரி இது எப்படி நம் மனதில் ஞாபகமாக இருக்கும் என்று கேட்கிறீர்களா? கீழ்க்கண்ட வழிகளில் சிந்தியுங்கள். முதலில் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் புரோகிராம் ஸ்பேஸ் இணைந்த சொல் தொடர்களைப் பாஸ்வேர்டாக ஏற்றுக் கொள்ளுமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பின் உங்களுக்கு பிரியமான ஒரு வாக்கியத்தை நினைவில் கொள்ளுங்கள்.  My son is three years old. இப்போது இந்த வாக்கியத்தில் உள்ள சொற்கள் அனைத்திலும் முதல் எழுத்துக்களை எடுத்து ஒரு பாஸ் வேர்ட் அல்லது பாஸ் பிரேஸ் அமையுங்கள். எடுத்துக் காட்டாக இந்த வாக்கியத்தில் இருந்து msityo  என்ற சொல் கிடைக்கிறது. இதிலும் கூட இடையே ஏதேனும் ஒரு எழுத்தை கேபிடல் லெட்டராக அமைக்கலாம். அடுத்து இதனுடன நீங்கள் விரும்பும் ஸ்பெஷல் கேரக்டர் அல்லது எண்களை இதனுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.  m$sit3yo  என்று கூட அமைக்கலாம். இந்த பாஸ்வேர்டை ஏதேனும் ஒரு இணைய தளத்தில் கொடுத்தால் அது ஸ்ட்ராங்கானதா என்று சொல்லும்.

இனி தவிர்க்க வேண்டியவற்றைப் பார்க்கலாம்.

1. தொடர் எழுத்துக்கள் அல்லது எண்களைத் தவிர்த்திடுங்கள். 1234567 என்பது போலவோ abcdefgh  என்றோ இருக்கக் கூடாது. அல்லது கீ போர்டில் உள்ள அடுத்தடுத்த எழுத்துக்கள் இணைந்ததாகவோ இருக்கக் கூடாது. இதனை ஒருவர் எளிதில் அனுமானித்துவிடலாம்.

2. S க்குப் பதிலாக $ அல்லது O வுக்குப் பதிலாக 0  என அமைத்தால் இந்த் லாஜிக்கைப் பயன்படுத்தி பிறர் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

3. உங்கள் பெயரில் ஒரு பகுதி, பிறந்த நாள், பான் கார்டு எண் அல்லது உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் மேற்படி விஷயங்களை பாஸ்வேர்டில் அமைக்க வேண்டாம்.

4. சொற்களைப் பின்புறமாக அமைத்தல் (Password Drowssap  / ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து அமைத்தல் (Computer Cmuer)  போன்ற வழிகளும் கூடாது. பொதுவாக மக்கள் தவறிழைக்கும் சொற்களையும் (Indhia, Telifon)  பயன்படுத்தக் கூடாது. சிலர் வேண்டுமென்றே சொல்லக் கூசும் சொற்களைப் பயன்படுத்துவார்கள். இதனால் இன்னொரு நாளில் நம் குழந்தைகளிடம் பாஸ்வேர்ட் என்ன என்று சொல்ல முடியாது.

5. ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. இமெயில் அக்கவுண்ட்டிற்கு ஒன்று, பேங்க் அக்கவுண்ட்டிற்கு ஒன்று, சில குறிப்பிட்ட தளங்களில் நுழைய வேறு என வெவ்வேறு பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தவும்.

6. ஆன்லைனில் உங்கள் பாஸ்வேர்ட்களை எல்லாம் ஸ்டோர் செய்து வைத்தல் கூடாது.

7. பாஸ்வேர்ட்களை வேற்று நபர்களிடம் சொல்லவே கூடாது.

8. பாஸ்வேர்ட்களை எழுதி வைத்திருந்தால் அவற்றை மற்றவர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். நமக்கு உற்றவர்கள் வேறு நபர்களிடம் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பாஸ்வேர்டை வெளியிடுவதும் கூடாது.9. இமெயிலில் அல்லது இமெயில் வழியாக வந்துள்ள படிவங்களில் பாஸ்வேர்டை டைப் செய்து அனுப்புவது கூடவே கூடாது.

10. பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். உங்கள் பாஸ்வேர்ட் 14 கேரக்டர்களில் அமைந்து மிகவும் ஸ்ட்ராங்காக யாரும் அணுக முடியாதபடி இருந்துவிட்டால் ஓர் ஆண்டு வரை கூட மாற்றாமல் வைத்திருக்கலாம்.

11. உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். இன்டர்நெட் மையங்கள், சைபர் கபேக்கள், பகிர்ந்து பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள், கருத்தரங்குகளில் தரப்படும் கம்ப்யூட்டர்கள், விமான மற்றும் இரயில்வே நிலையங்கள் ஆகியவற்றில் இமெயில் பார்ப்பது, பேங்க் பேலன்ஸ் கையாள்வது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

12. எப்படிப்பட்ட பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்தினாலும் வல்லவனுக்கு வல்லவனான சில திருடர்கள் உங்கள் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உடனே சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற ஆன்லைன் வர்த்தக மையங்களுக்குத் தெரியப்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டில் நீங்களாக தெரியப்படுத்தும் வரை வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லுங்கள். உடனே பாஸ்வேர்டை மாற்றும் வழிகளை மேற்கொள்ளுங்கள். ஏதேனும் திருடு நடைபெற்றதாகத் தெரிந்தால் உடனே அதற்கான காவல்துறை நிலையங்களில் முறையாகத் தெரிவித்து நடவடிக்க எடுக்கச் செய்யுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத்தான் பாதகமாக அமைந்திடும்.

Labels: