தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


கூகுள் தரும் புதிய வசதிகள்

வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து விடுதலை பெறுங்கள்.

கூகுள் மெயில் அண்மைக் காலமாக சில புதிய வசதிகளைத் தந்துள்ளது. இவற்றை ஒரு சிலரே கவனித்துப் பயன்படுத்தி வருகின்றனர். பலருக்கு இது போன்று வசதிகள் உள்ளன என்று தெரிய வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். சிலர் பயன்படுத்தி வந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள இந்த வசதிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

* வண்ண லேபிள்கள் (Colored labels) : இந்த வண்ண லேபிள்கள் மூலம் உங்களுக்கான இமெயில்களை வகைப் படுத்த வசதியாக இருக்கும். ஒவ்வொரு லேபிள் பக்கத்தில் இருக்கும் கலர் பட்டி மீது கிளிக் செய்து ஒவ்வொரு மெயிலுக்கும் வண்ண லேபிள்களைக் கொடுங்கள்.

* குரூப் சாட்டிங் (Group chat) : சாட்டிங் எனப்படும் அரட்டையில் பலருடன் பேச வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்டோவினைத் திறந்து பேச வேண்டும். இப்போது இந்த சிரமம் களையப்பட்டு ஒரே விண்டோவில் அனைவருடன் பேசும் வசதி தரப்படுகிறது. இது போன்ற ஒரு குரூப் சேட்டிங் தொடங்க சாட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஆப்ஷன்ஸ் மெனுவிலிருந்து குரூப் சேட் என்பதனை கிளிக் செய்திடவும். அடுத்தடுத்து வருபவை எல்லாம் ஒரே விண்டோவில் கிடைக்கும்.

* புதிய எமோட்டிகான்கள் (emoticons) : உங்கள் உணர்வுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்த பல புதிய எமோட்டிகான்கள் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்துங்கள். வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து விடுதலை பெறுங்கள்.

* இலவச ஐ–மேப் வசதி (Free IMAP) : இதன் மூலம் உங்கள் இன் – பாக்ஸில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்தினாலும் அது நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைகிறது. மொபைல் போன் வழியே இன் – பாக்ஸ் பார்த்தாலும் டெஸ்க் டாப் வழி யேபார்த்தாலும் இந்த மாற்றங்கள் காட்டப்படுகின்றன.

* மற்ற அக்கவுண்ட் இமெயில்கள்: உங்களுக்கு உள்ள வேறு இமெயில் அக்கவுண்ட்டுகளுக்கு வரும் இமெயில் கடிதங்களை கூகுள் மெயிலில் இருந்தே பெற்றுப் பார்க்கலாம். இது போல ஐந்து வேறு வேறு இமெயில் அக்கவுண்ட்களைப் பார்க்க கூகுள் மெயில் அனுமதிக்கிறது.

அவை அனைத்தும் கூகுள் மெயில் அக்கவுண்ட்டிலேயே வைத்துக் கொள்ளவும் செய்கிறது. இவற்றிற்குப் பதிலளிக்க வேண்டுமாயின் அதற்கெனவே தனி ‘from’ address   வடிவமைத்துத் தருகிறது. இதனால் பதில் கூகுள் தளத்திலிருந்து வருகிறது என்று அதனைப் பெறுபவர்களுக்குத் தெரியாது. ஆனால் வேறு இமெயில் அக்கவுண்ட்டுகள் அதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட அக்கவுண்ட்டாக இருக்க வேண்டும். வெப் சர்வரிலேயே வைத்துப் பார்க்கும்படியானதாக இருக்கக் கூடாது.

Labels:

0 Comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator