தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


Alli Arjuna - Sollayo Solaikili - .wmv

Labels:

Vaseegara Minnale tamil song

Labels:

தக்காளி சூப்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Labels:

காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்

பச்சரிசி / பாசுமதி அரிசி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
காளான் - 200 கிராம்
புதினா - 1 கட்டு (சிறியது)
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை

இஞ்சி - 2 இஞ்ச் அளவு
பூண்டு - 12 பல்லு
முந்திரி - 3
பாதாம் - 2
பிஸ்தா - 2

தாளிக்க தேவையானவை

நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 6
கிராம்பு - 6
ஏலக்காய் - 4 (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு பொடி - 1 தேக்கரண்டி
அன்னாசி பூ - 2 இதழ்
மராட்டி மொக்கு - 3
பிரியாணி இலை - 1
கரம் மசாலா தூள் (மல்லித் தூள்) - 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

செய்முறை

1. அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி கழுவி வைக்கவும்.

2. புதினாவை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்

3. வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும்.

4. காளானை அரிந்து இரண்டு முறை நன்றாகக் கழுவி வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5. குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.

6. அனைந்து பொரிந்ததும், அரைக்க கூறப்பட்ட பொருள்களை அரைத்து, இதனுடன் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு சோம்பு சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், புதினா தழை சேர்த்து வதக்கவும்.

8. அடுத்து பச்சைமிளகாய், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.

9. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

10. அடுத்து ஊறவைத்து வடிக்கட்டிய அரிசியை போட்டு (பாசுமதி அரிசி 1 பங்கு : தண்ணீர் 2 பங்கு)(பச்சரிசி 1 பங்கு : தண்ணீர் 2 1/2 பங்கு) லேசாக கிளறி, சுடுதண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

11. குக்கர் ஆவி அடங்கியது, கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. தேவைப்பட்டால் குக்கரை மூடி வேகவைப்பதற்கு முன், அரை எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து வேகவைக்கவும்.

Labels:

இறால் வடை

தேவையானப் பொருட்கள்

இறால் - 1/4 கிலோ
பச்சரிசி ரவை - 2 க‌ப்
ப மிளகாய் - 5
க‌றிவே‌ப்‌பிலை, கொத்தமல்லி
மஞ்சள் தூள் - 1 ‌சி‌ட்டிகை
கரம் மசாலாத் தூள், இஞ்சி, பூ‌ண்டு ‌விழுது - தலா 1 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 1 க‌ப்
உப்பு

செய்முறை

இறா‌லை தோ‌ல் உ‌ரி‌த்து கழு‌வி, இர‌ண்டிர‌ண்டாக நறு‌க்‌கி அ‌தி‌ல் மஞ்சள் தூள், மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, தூ‌ள் உப்பு அனைத்தையும் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய், க‌‌றிவே‌ப்‌பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இறாலுட‌ன் சே‌ர்‌க்கவு‌ம்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இறாலை வதக்‌கவு‌ம். ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் இற‌க்‌கி ஆற ‌விடவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் அ‌ரி‌சி மாவை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் இறா‌ல் வத‌க்கலை சே‌ர்‌க்கவு‌ம்.

மா‌வி‌ல் தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து ‌சி‌றிது த‌ண்‌‌ணீ‌ர் தெ‌ளி‌த்து வடை மாவு பத‌த்‌தி‌ற்கு ‌பிசையவு‌ம்.

வாணலியில் 2 க‌ப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி போட வேண்டும்.

வடை இரு ப‌க்கமு‌ம் ந‌ன்கு வெ‌ந்து பொ‌ன்‌னிறமானது‌ம் எடு‌த்து ப‌ரிமாறவு‌ம்.

Labels: