இறால் வடை
தேவையானப் பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
பச்சரிசி ரவை - 2 கப்
ப மிளகாய் - 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலாத் தூள், இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 கப்
உப்பு
செய்முறை
இறாலை தோல் உரித்து கழுவி, இரண்டிரண்டாக நறுக்கி அதில் மஞ்சள் தூள், மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, தூள் உப்பு அனைத்தையும் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இறாலுடன் சேர்க்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இறாலை வதக்கவும். நன்கு வதங்கியதும் இறக்கி ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவைக் கொட்டி அதில் இறால் வதக்கலை சேர்க்கவும்.
மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு பிசையவும்.
வாணலியில் 2 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி போட வேண்டும்.
வடை இரு பக்கமும் நன்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.
Labels: cuisine
0 Comments:
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI