பிளேட்டோவின் பொன் மொழிகள் - plato
Labels: philosophy, plato

பிளேட்டோவின் பொன் மொழிகள் - plato
"ஒரு நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவவேண்டுமாயின் அந்நாடு மிகப் பெரியதாகவோ மிகச் சிறியதாகவோ இருத்தல் கூடாது. அந்நாடு ஓர் அளவுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்நாட்டில் அமைதியும் மனநிறைவும் அரசோச்சுவதைக் காணலாம்."
"நல்ல பண்புகளைப் பெறுவதிலும் பிறர்க்குப் புகட்டுவதிலும் ஆர்வம் காட்டுவோர் தொகை பெருக வேண்டும். நுகர்வான்ந பிறரைத் துன்புறுத்தும் அளவிற்குத் துன்பப்படுவான். ஆதலால் தீய பண்புகளை வளரவிடாமல் நல்ல பண்புகளை வளர விடுதலே நல்லது."
"துன்பம் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகும் ஒன்றுதான். எனவே, துன்பம் உண்டாகும்போது நாம் மன அமைதியைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. நாம் அப்பொழுதுதான் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பொறுமையில்லாமலும் அமைதி இல்லாமலும், உணர்ச்சி வயப்பட்டு நடப்பதால் பெறக்கூடிய பயன் ஒன்றுமே இல்லை. இந்த மனநிலையே இன்பம் வந்தபோதும் இருக்க வேண்டும்."
"பிறர் நமக்கு இழைத்த இன்னல்களுக்காக அவர்களைக் கடுமையாகத் தண்டியாமல் விடுதலும், மனிதர் இயல்பாகச் செய்யும் தவறுகளைப் பொறுப்பதும், நமக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை மறந்து நன்மைகளை மட்டும் எண்ணுவதும் பெருந்தன்மையாகும்."
Labels: philosophy, plato ஷேக்ஸ்பியரின் சிந்தனை!
அறிவாளி மெதுவாகப் போவான் வேகமாக ஓடுகிறவன் தடுக்கிவிழுவான்!நிதானம் தேவை, 'தானத்தில் சிறந்தது நிதானம்' என வேடிக்கையாகச் சொல்வதுண்டு 'அவசரக்காரனுக்கு புத்திமட்டு' என்று எச்சரிப்பதுண்டு. இதே கருத்து.... ஷேக்ஸ்பியர் அழகாக, எளிமையாகப் புரிகிற மாதிரி சொல்கிறார். மெதுவாகப் போகிறவன் அறிவாளி, ஒவ்வொரு அடியையும் பார்த்துப்பார்த்து வைக்கிறவன் புத்திசாலி, தடுமாறாது.... கீழே விழாது.... வழுக்காது... இலக்கை அடைகிறான். அவசரம்.. ஆசை.... நிதானமின்மை... யோசனை இல்லாமை... இதனால் சீக்கிரம் சாதிக்க நினைத்து ஓடுகிறவன் கால் தடுமாறுகிறான். தடுக்கி விழுகிறான், காலில் அடி, வலி, தோல்வி எழுந்து ஓடுவதற்குள் அடுத்தவன் ஜெயிக்கிறான்... Labels: philosophy, shakespeare குடியாட்சி அரசாங்கம்!! - சாக்ரடீஸ்
இம்முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதில் தலைவர்கள் அல்லது வல்லுநர்கள் சிறப்பான அறிவுத் திறமையைப் பெற்றிருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய சான்று எதுவும் இல்லை.குடியாட்சி அரசாங்கத்தில் மக்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள்களை வரையறுக்கும் பொறுப்பு அரசாங்கத்தை நடத்துவதற்குப் போதிய செயலறிவு அற்ற மக்களிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் ஓர் ஆட்சிக் கொள்கை ஒழுக்க செயலுக்கு அல்லது நீதிக்குப் பொருந்தி இருக்கிறதா என்று தீர்மானிப்பதற்கு உரிய மன வளர்ச்சி அல்லது மதிப்பு மக்கள் எல்லோரிடத்திலுமே சமமாகக் காணப்படுகிறதென்று பிழையாகக் குடியாட்சி அரசாங்கம் கருதுகிறது. அரசு அறிவு வாய்ந்த குழுவினருடைய ஆட்சியில் இருத்தல் வேண்டும். மனிதர் சமமானவர் என்ற அடிப்படையில், திருவுளச் சீட்டு முறையில் அலுவலர்களை அமர்த்துகிற அதீனியக் குடியாட்சி கண்டிக்கப்படத் தக்கதாகும். Labels: philosophy, socrates கனவுகள்..... - பிளேட்டோ
நல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்திலும் அடக்க முடியாத சில மிருகப் பிராந்தியமான இச்சைகள் இருக்கின்றன. அவை மனிதன் உறங்கும் போது கனவுகளாக வெளிப்படுகின்றன.அன்றாட வாழ்க்கையைப் பரிசுத்தமாகவும், நிதானமாகவும் நடத்திச் செல்பவன், உறங்கப்போவதற்கு முன் மிதமாக உணவருந்தித் தன் மனதிலுள்ள இச்சைகளையும் கோபதாபம் முதலான உணர்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு, உறங்குவானாகில் அவன் கெட்ட கனவுகள் காணமாட்டான்.. Labels: philosophy, plato வெற்றிக்கான வழி் - லெனின்!
தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி. தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. Labels: lenin, philosophy ஞானி பற்றி - சாக்ரடீஸ் கூற்று!
ஞானமடைந்தவன் ஒவ்வொருவனும் உடலை விட்டுப் போகவே விரும்புவான். ஆனால் பலவந்தமாய் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பமாட்டான். நாம் அனைவரும் கடவுளின் பாதுகாப்பிலிருக்கிறோம். நாம் நம்மை நாம் வதைத்துக்கொள்ள நமக்கு உரிமையில்லை. கடவுள் நமக்கு விடுதலையளிக்கும் வரையிலும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.ஞானியினுடைய ஆத்மா, தன்னைச் சிறைப்படுத்தியுள்ள உடலைவிட்டுத் தனியாகிவிடவே. எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கும். என்னை எல்லோரும் ஞானி என்கிறார்கள். ஆனால் எனக்கு மாத்திரமே தெரியும். எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது. யார் தன் வாழ்நாளில் ஐம்புலன்களை அடக்கி, உடல் வழியாய் வரும் இன்ப துன்பங்களை நீக்கி ஆத்மஞானம், நிடுநிலை, தர்மம், அச்சமின்மை, அவாவின்மை, வாய்மை ஆகியவற்றை வளர்த்து வருகிறானோ, அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. தன் ஆத்மா நற்கதியடையும் என்று அவன் நம்பிக்கையுடனிருக்கலாம். தவறான பேச்சுக்களால், பேச்சுமாத்திரம் கெட்டுப்போவதில்லை. ஆத்ம ஞானமும் கெட்டுப் போய்த் துன்பம் உண்டாகிறது. Labels: philosophy, socrates வாழ்வியல்நீ எப்படி வாழ விரும்புகிறாய் என்பதற்கான உன் தளரா முயற்சியினாலேயே நீ பிறருடைய பாராட்டினைச் சம்பாதிக்கமுடியும். புற அழகை விட்டுத்தள்ளுங்கள்; அக அழகை அளித்தமைக்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்துங்கள்! மனச்சாட்சித் தெளிவில்லாமல் பிறரைக்காட்டிலும் நல்ல முறையில் வாழ்வதாக, யாராலும் தோற்றமளிக்க முடியாது. திருப்தி என்பது இயற்கைச் செல்வம், ஆடம்பரம் என்பது செயற்கை வறுமை. ஒரு நல்ல மனிதனுக்கு வாழ்க்கையிலும் சரி, மரணத்திலும் சரி எந்தத்தீங்கும் நேர்ந்து விடாது என்பது உண்மை. எனவே மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வோம். Labels: philosophy, socrates கடவுள்நேர்மையான மனம் படைத்தவனுக்குச் சட்டந்தான் கடவுள்; முட்டாளுக்குக் கேளிக்கைதான் கடவுள். சத்தியந்தான் கடவுள். ஒளிதான் அவரது நிழல். கடவுள் ஒரு சேட்த்திரக் கணிதர். அவர் உலகத்தைச் சிருஷ்டித்தது போலவே, அவருடைய உலக பரிபாலனமும் க்ஷேத்திர கணித நுட்பமுள்ளது. கடவுள் மாயாஜால வித்தைக்காரர் அல்லர். நினைத்தபடியெல்லாம் விதவிதமான உருவங்களில் அவதாரங்கள் எடுக்க மாட்டார். அவர் என்றென்றும் ஒரே மாதிரி இருப்பவர். கடவுளானவர் சொல்லிலும் செயலிலும் பரிபூரண எளிமையுள்ளவர்; மெய்மையானவர்; அவர் உருவம் மாறுவதில்லை; அவதாரங்கள் எடுப்பதில்லை; அசரீரி வாக்காலோ, தெய்வீக சமிக்ஞைகளாலோ, கனவில் வந்தோ நனவில் நடந்தோ யாரையும் ஏமாற்றுவதில்லை; அவர் மாயாவி அல்லர்; மாய ரூபங்கள் எடுத்து மனித ஜாதியை ஏமாற்றுவதில்லை. Labels: philosophy, plato மனிதன், இறைவன், அரசியல்
அரிஸ்டாட்டில் மனிதன், இறைவன், அரசியல் என மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது தத்துவ தரிசனமாக உலகிற்கு வழங்கியவை.'இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!' 'மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச் சிந்தனையோடு வாழ வேண்டும்.' 'அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடமோ, அல்லது சிலரிடமோ இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நன்மைக்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள். அதை விடுத்து அதிகாரத்தில் இருப்பவர்களின் நலன் மட்டுமே பேணப்படுமாயின் அது மோசமான நலைமைக்குக் கொண்டு செல்லும்.' Labels: aristotle, philosophy பூமியிலேயே பொன்னுலகம்தத்துவ மேதைகள் இதுவரை உலகை வர்ணனை தான் செய்திருக்கிறார்கள்.நாம் இனி அந்த உலகை மாற்ற வேண்டும். "இதுவரை பூசாரிகளும் மதத்தலைவர்களும் உங்களுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் சொர்க்கத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான் காட்டும் வழி உங்களை பூமியிலேயே பொன்னுலகம் அடைய வைக்கும்….. வாழ்க்கை என்பது அறிவால் நிர்ணயிக்கபடுவது அல்ல.. உங்கள் அறிவு நீங்கள் வாழும் வாழ்க்கையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது." ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக்கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்." (மூலதனம், தொகுதி 1, அத்தியாயம் 7) Labels: karl-marx, philosophy ரூசோவின் சிந்தனைகள்
தனது குற்றங்களை மறந்து, பிறரின் உள்ளத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது தவறு.ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும். Labels: philosophy, rousseau |