தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


தென்னை தரும் தொழில்கள்

தென்னை மரங்கள் வளர்ப்பில் கேரள மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது.  தொன்னையின் மூலமாக பல்வேறு பொருட்களை நாம் தயாரிக்கலாம்.  தேங்காய், இளநீர் ஆகியவற்றில் இருந்து பல புதிய பொருட்களை பெறமுடியும்.  அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும்.

நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்திரும் வகையில் பல புதிய தொழில் நுட்பங்களை தென்னை வளர்ச்சி வாரியம் கண்டுபிடித்து உள்ளது.

தேங்காய் தண்ணீரின் பயன்கள்:-

கேரளாவில் தேங்காய் தொடர்பான தொழிலின்போது சுமார் 25 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாகிறது.
Read more »

Labels:

மரவள்ளிக்கிழங்கும், ஜவ்வரிசி தொழிலும்

தமிழ்நாட்டின் வேறுபல மாவட்டங்களுக்கு இல்லாத பல தனி சிறப்புகள் சேலம் மாவட்டத்துக்கு உண்டு.  அத்தகைய சிறப்புகளில் சேலம் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் ஜவ்வரிசி தொழிலும் பக்கத்து மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியில் 1 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த ஜவ்வரிசி தொழில்தான் வாழ்வின் ஆதாரமாக விளங்கி வருகிறது.  அதற்கு காரணம் இந்த மாவட்டத்தின் மண்வளம்தான்.  இங்குள்ள மண்வளத்தால் சேலம் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களின் சில பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பிரதான விவசாயமாக நடந்து வருகிறது.

மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தால் விவசாயிகள் மட்டுமல்ல அந்த கிழங்கில் இருந்து ஸ்டார்ச் (கிழங்கு மாவு), ஜவ்வரிசி, திப்பி ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழில்  சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவிலும் மற்ற ஈரோடு, திருவண்ணாமலை, கரூர் மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது.  
Read more »

Labels:

ஈமுவின் (emu) உணவுப் பழக்கமும், வளர்ச்சி நிலைகளும்

ஈமு வெஜிடேரியன் (சைவம்) வகையைச் சேர்ந்தது.  காய்கள், பழங்கள், கீரைகள் உணவாக உட்கொள்ளும்.  சிறு மற்றும் குறுந்தானியங்களையும், முளைகட்டிய தானியங்களையும் உட்கொள்ளும், பப்பாளிப்பழம், வெள்ளரிப்பழம், தக்காளிப்பழம், புடலங்காய், மாங்காய் மற்றும் முட்டைக்கோஸ், காலிப்ளவர் ஆகியவற்றை விரும்பி உண்ணும்.  கீரைகளில் அகத்திக்கீரை, முருங்கைகீரை இவற்றை விரும்பி சாப்பிடும்.  இவை எல்லாவற்றையும் உணவாக உண்டாலும் புற்களை சாப்பிடாது.  மனிதர்களைப் போல ஈமுவிற்கு உள்ள நல்ல குணம்.  அழுகின பொருட்களை திரும்பிக்கூட பார்க்காது.

பொருளாதார ரீதியாக வளர்க்கப்படும் மற்ற விலங்கினங்களில் தரும் பயன்களை ஒப்பிடும்போது 95 சதவீதம் முழு பயனையும் கொடுக்கும் தன்மை ஈமுவிற்கு மட்டுமே உண்டு.  வருங்காலத்தில், சிறப்பான பொருளாதார முன்னேற்றம் தரும் முன்னணி கால்நடை வளர்ப்பாக இருப்பது ஈமு என்றால் அதற்கு மிகையில்லை.  இதனை ஈமு கொடுக்கும் பலன்களை பார்த்தாலே தெரியும்.
Read more »

Labels:

லாப நோக்கில் ஈமு வளர்ப்பு (emu koli)

தற்போது ஈமு(emu) வளர்ப்பானது பலரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த தொழிலாக இருக்கிறது.  இந்த நோக்கம் எல்லாம் ஈமுவின் மூலம் பொருளாதார தன்னிறைவினை நாம் அடைந்துவிட வேண்டும் என்பதுதான்.  இந்த நோக்கத்தில்தான் ஈமு பண்ணைகளை அமைக்கின்றனர்.  இவ்வாறு எண்ணம்கொண்டவர்களுக்கும், புதியதாக ஈமு பண்ணை (emu form)அமைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஈமுவினை பற்றி சில தகவல்களை பார்ப்போம்.

முதலில் பண்ணை (emu form) வைக்க குஞ்சுகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை பார்ப்போம்....

கண் பார்வை சரியாக உள்ளதா என அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.  பார்வை குறைபாடு இருக்குமேயானால் கொடுக்கும் தீவனத்தை சரியாக எடுக்க முடியாமல் போகலாம்.  அதோடு கூட்டமாக வளரும் நிலையில் மற்ற ஈமுக்களை பார்த்து ஒதுங்கி போகவும், தடுப்பு பொருளில் மோதி இறப்பு உண்டாகாமலும் இருக்க பார்வை மிகவும் அவசியம்.  அதனால் ஈமு வாங்கும் போதே பார்வை திறனை சோதித்து வாங்க வேண்டும்.
Read more »

Labels:

சிறுதொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்

சம்பளத்துக்காக பணியாற்றுபவரை விட சுயதொழில் செய்பவர்கள்தான் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதுடன், சுதந்திரமாகவும் வாழ்கின்றனர்.  ஆதலால்தான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் படிப்புக்கு பின்னர் எந்த வேலைக்கு செல்லப்போகிறீர்கள் என்று கேட்டால் சுயமாக தொழில் தொடங்கி முன்னேறுவதுதான் எங்களுடைய குறிக்கோள் என்பர்.  சோம்பேறிகளுக்குதான் படிகள் தடைகளாகத் தெரியும்.  திறமைசாலிக்கோ தடைகளும் படிகளாக மாறும்.  ஒரு செயலை விடாமுயற்சியுடன் நாம் செய்யும் போது வெற்றி நிச்சயம்.  ஆதலால்தான் முயற்ச்சி திருவினையாக்கும் என்றார்கள் நம் முன்னோர்கள்.  இன்றைய இளைஞர்களில் பலர் விவசாய பணிகளில் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி, உழைக்கும் எண்ணம் மாறி, கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கும் பணிகளைதான் விரும்புகின்றனர்.

Read more »

Labels: