தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


ஈமுவின் (emu) உணவுப் பழக்கமும், வளர்ச்சி நிலைகளும்

ஈமு வெஜிடேரியன் (சைவம்) வகையைச் சேர்ந்தது.  காய்கள், பழங்கள், கீரைகள் உணவாக உட்கொள்ளும்.  சிறு மற்றும் குறுந்தானியங்களையும், முளைகட்டிய தானியங்களையும் உட்கொள்ளும், பப்பாளிப்பழம், வெள்ளரிப்பழம், தக்காளிப்பழம், புடலங்காய், மாங்காய் மற்றும் முட்டைக்கோஸ், காலிப்ளவர் ஆகியவற்றை விரும்பி உண்ணும்.  கீரைகளில் அகத்திக்கீரை, முருங்கைகீரை இவற்றை விரும்பி சாப்பிடும்.  இவை எல்லாவற்றையும் உணவாக உண்டாலும் புற்களை சாப்பிடாது.  மனிதர்களைப் போல ஈமுவிற்கு உள்ள நல்ல குணம்.  அழுகின பொருட்களை திரும்பிக்கூட பார்க்காது.

பொருளாதார ரீதியாக வளர்க்கப்படும் மற்ற விலங்கினங்களில் தரும் பயன்களை ஒப்பிடும்போது 95 சதவீதம் முழு பயனையும் கொடுக்கும் தன்மை ஈமுவிற்கு மட்டுமே உண்டு.  வருங்காலத்தில், சிறப்பான பொருளாதார முன்னேற்றம் தரும் முன்னணி கால்நடை வளர்ப்பாக இருப்பது ஈமு என்றால் அதற்கு மிகையில்லை.  இதனை ஈமு கொடுக்கும் பலன்களை பார்த்தாலே தெரியும்.
ஈமு கோழியின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தது.  ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிகப்பு மாமிசம் கொடுக்கவல்லது.  அதேபோல் பறவை இனங்களில் சிகப்பு மாமிசம் கொடுக்கும் ஒரே பறவை இனம் ஈமுதான்.

ஈமு சிகப்பு மாமிசம் வகை இறைச்சி கொடுப்பதால், வெளிநாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதன் இறைச்சி அதிகருசியுடனும், மிருதுவான தன்மையுடனும், அதிக எலும்புகள் இல்லாத சதையுடனும் இருக்கும்.  அதே வேளையில் நார்த்தன்மை இல்லாமலும் இருக்கும்.  40 முதல் 45 கிலோ உயிர் எடை இருக்கும் கோழியிலிருந்து 20 முதல் 25 கிலோ இறைச்சி வரை கிடைக்கும்.

ஆடு, மாடு, கோழி இவற்றின் இறைச்சிகளை ஒப்பிடும் போது, ஈமு இறைச்சியில் புரத சத்து அதிகம் உள்ளது.

மற்ற இறைச்சியினை ஒப்பிடும் போது, ஈமு இறைச்சியில் கொலஸ்ட்ரால், அதாவது கொழுப்பு சத்து மிக குறைவே.  இதனாலேயே, அமெரிக்க இருதய நோய் மருத்துவ நிபுணர்குழு இருதய நோயாளிகள், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், இருதய மாற்றுப்பாதை சிகிச்சை மேற்கொண்டவர்கள், ஈமு இறைச்சியினை சாப்பிட சிபாரிசு செய்துள்ளனர்.

மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், வயதானவர்கள்,  நோயில் இருந்து மீண்டவர்கள், ஆரோக்கியத்தினை திரும்ப பெற ஈமு இறைச்சி ஏற்றது என கூறியுள்ளார்கள்.

இத்தகு சிறப்புகளை உணர்ந்து கொண்ட நம் பகுதியினரும், தற்போது ஈமு இறைச்சியினை விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர்.


Labels:

1 Comments:

At January 25, 2013 at 2:56 PM , Anonymous Anonymous said...

Wonderful articlе! Wе will be linking to this great cοntent on our site.
Keep uρ the great writing.
My blog post :: www.prweb.com/releases/silkn/sensepilreview/prweb10193901.htm

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator