விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
விநாயகர் சதுர்த்தி பொதுவாக பிள்ளையாரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
இவ்விழா நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
வழிபடும் முறை:
விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராட வேண்டும். பின் பூஜை அறையில் சுத்தமான பலகையை வைத்து அதன் மீது கோலம் போடவேண்டும். அதன் பிறகு தலைவாழை இலையை வைத்து அதன் மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். பிறகு புதிய களிமண் விநாயகர் சிலையை அரிசிக்கு நடுவில் வைக்க வேண்டும்.
அதன் பின் அருகம் புல், பூக்கள், வன்னி, மந்தாரை இலைகளையும் விநாயகருக்கு அர்சனை செய்ய வேண்டும்.இவ்விழா நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
வழிபடும் முறை:
விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராட வேண்டும். பின் பூஜை அறையில் சுத்தமான பலகையை வைத்து அதன் மீது கோலம் போடவேண்டும். அதன் பிறகு தலைவாழை இலையை வைத்து அதன் மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். பிறகு புதிய களிமண் விநாயகர் சிலையை அரிசிக்கு நடுவில் வைக்க வேண்டும்.
விநாயகருக்கு அருகில் ஒரு செம்பில் நீர் நிரப்பி அதன்மேல் மா இலை, தேங்காய் வைத்து கும்பமாக அலங்கரிக்க வேண்டும். பின் விளக்கேற்றி; சுண்டல், பழங்கள், கொழுக்கட்டை, நெய்வேத்தியம் என பல பொருட்களை வைக்க வேண்டும்.
எல்லாம் தயாரான பிறகு பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாத்திவிட்டு அதன் பிறகு எருக்கம் பூ மாலை, வன்னி மந்தாரை எல்லாம் சாத்த வேண்டும்.
பிறகு கணபதியின் மூல மந்திரமான ஓம், ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதியே வரவரத ஸர்வஜனம்மே வஸமானய ஸ்வாஹா என்று 51 முறை மந்திரத்தை சொல்ல வேண்டும். பிறகு விநாயகர் துதிகளையும், பாடல்களையும் சொல்லிவிட்டு முடிவில் தூபம், தீபம் செய்து விநாயகரை வழிபட வேண்டும்.
இரு நாள் மட்டும் விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கிறவர்கள் அன்று மாலை நிலவு வந்ததும் சந்திரனை பார்த்து விட்டு பிள்ளையாரை வணக்க வேண்டும். அப்படி செய்தால் விரதம் முழுமையாக பூர்த்தியாகும்.
Labels: news
3 Comments:
சதுர்த்தி குறித்தான விளக்கமும்
வழிபடும் முறையை மந்திரத்தோடு
சொன்னவிதமும் முடிக்கும்முறையும்
சொன்னவிதம் அருமை
அனைவருக்கும் பயன்படும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
விநாயகரை வழிபட அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ஆனால் வடை போச்சே.... அடுத்த வருடம் கண்டிப்பாக.. மிக்க நன்றி. வலைப்பூவை அழகாக வடிவமைத்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI