தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


ரவா லட்டு

தேவையான பொருட்கள்

ரவை - 3/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
பால் - 1/4 லிட்டர்
நெய் - 50 கிராம்
திராட்சை - 10

செய்முறை

1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

2. சர்க்கரையையும், ஏலக்காயையும் மிக்ஸியில் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும்.

3. பிறகு சர்க்கரையையும், ரவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

4. இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

5. பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு

1. சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அப்போது தான் உருண்டை உதிராமல் இருக்கும்.

Labels:

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை என்று புலம்புபவர்களுக்கு இது நல்ல செய்தியாகும்.

அதாவது, ஆஸ்துமா நோயுற்றவர்களுக்கு மிளகு ஒரு அருமருந்தாக அமைகிறது.

மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

இதில் ஒரு மாத்திரை வீதம் இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும்.

இதேப்போல, ஆஸ்துமா நோயினால் மூச்சு விட சிரமப் படும்போது ஒரு பழுத்த வாழைப்பழத்தை அனலில் வேக வைத்து, மிளகுத்தூளில் தொட்டு உட்கொள்ள உரிய நிவாரணம் பெறலாம்.

Labels:

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

Labels:

ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்த வாகை மர‌ம்

முரு‌ங்கை இலையை‌ப் போ‌ன்ற இலைகளுடனு‌ம், ‌சீக‌க்கா‌ய் போ‌ன்ற கா‌ய்களுடனு‌ம் காண‌ப்படு‌ம் வாகை மர‌த்தை பல‌ர் அ‌றி‌ந்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள்.

இத‌ற்கு ப‌ல்வேறு மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ண்டு. பொதுவாக இ‌ந்த மர‌ம் பா‌ர்‌க்கவு‌ம் அழகான கா‌ட்‌சியை அ‌ளி‌க்கு‌ம்.

வாகை மர‌த்‌தி‌ன் ‌பி‌சி‌னி, மர‌ப் ப‌ட்டை, பூ, ‌விதை, இலை என அனை‌த்‌தி‌ற்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

வாகை‌யி‌ல் புரத‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ், சோடிய‌ம், பொ‌ட்டா‌சிய‌ம், மெ‌‌க்‌னீ‌சிய‌ம் ஆ‌கிய ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்து காண‌ப்படு‌கி‌ன்றன.

வாகை மர‌ப்ப‌ட்டையை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து பா‌லி‌ல் கல‌ந்து குடி‌த்து வர, ப‌சியை உ‌ண்டா‌க்கு‌ம். வா‌ய்‌ப்பு‌ண் குணமாகு‌ம்.

வாகை‌ப் பூவை சேக‌ரி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியளவாக வ‌ற்‌றியது‌ம் வடிக‌ட்டி குடி‌த்து வர, வாத நோ‌ய்களை குணமா‌க்கு‌ம். ‌விஷ‌ங்களை மு‌றி‌க்கு‌ம்.

Labels: