சத்துக்கள் நிறைந்த வாகை மரம்
முருங்கை இலையைப் போன்ற இலைகளுடனும், சீகக்காய் போன்ற காய்களுடனும் காணப்படும் வாகை மரத்தை பலர் அறிந்திருப்பீர்கள்.
இதற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. பொதுவாக இந்த மரம் பார்க்கவும் அழகான காட்சியை அளிக்கும்.
வாகை மரத்தின் பிசினி, மரப் பட்டை, பூ, விதை, இலை என அனைத்திற்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.
வாகையில் புரதச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர, பசியை உண்டாக்கும். வாய்ப்புண் குணமாகும்.
வாகைப் பூவை சேகரித்து நீர்விட்டுக் காய்ச்சி பாதியளவாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர, வாத நோய்களை குணமாக்கும். விஷங்களை முறிக்கும்.
Labels: health
0 Comments:
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI