தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


மீன் குழம்பு

தேவையானவை :

மீன் - 1/4 கிலோ
தக்காளி - இரண்டு
சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த் தூள் - 4 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
கடுகு, வெந்தயம், எண்ணெய் - தா‌ளி‌க்க
க‌றிவே‌ப்‌பிலை - ‌சி‌றிது
இ‌ஞ்‌சி - ‌‌‌சி‌றிது
பூ‌ண்டு - ஐந்து ப‌ல்
‌மிளகு - அரை தே‌க்கர‌ண்டி

செய்முறை :

‌மீனை சு‌த்த‌ம் செ‌ய்யவு‌ம். இ‌ஞ்‌சி, தக்காளி, வெங்காய‌ம் ஆகியவற்றை நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். பூ‌ண்டை தோலு‌ரி‌த்து வையு‌ங்க‌ள்.

‌மி‌க்‌ஸி ஜா‌‌ரி‌ல் ‌சி‌றிது த‌க்கா‌ளி, ‌சி‌றிது வெ‌ங்காய‌ம், இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, ‌மிளகு, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு அரை‌‌க்கவு‌ம்.

பு‌ளியை‌க் கரை‌த்து அ‌தி‌ல் உ‌ப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சே‌ர்‌க்கவு‌ம்.

அடுப்பில் குழ‌ம்பு பாத்திரத்தை வைத்து தா‌ளி‌த்து க‌றிவே‌ப்‌பிலை சே‌ர்‌த்த ‌பிறகு வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவு‌ம்.

‌பிறகு புளி‌க் கரைசலை ஊ‌ற்‌றி‌க் கொ‌‌தி‌‌க்கு‌ம் போது அரை‌த்து வை‌த்த ‌விழுதை சே‌ர்‌க்கவு‌ம்.

குழம்பு கொதித்து சு‌ண்டி வரு‌ம் போது, கழுவிய மீனைப் போட்டு 10 ‌நி‌மிட‌‌த்‌தி‌ல் இறக்கவு‌ம்.

Labels:

கூகுள் லேப்ஸ் - ன் புதிய அம்சங்கள்

கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம். கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.

ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.

ஜிGoogle Search மெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.

Undo Send: இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.

Snake:
கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.

Attachment Detector: அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.

Hide Unread Counts: நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.

Vacation Time : வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.

You Tube Preview: உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.

Insert Image: இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம்.

Labels: