தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


பூ‌க்‌க‌ளி‌ன் மரு‌த்துவ குண‌ம்

* அல்லிப் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

* சூரிய காந்திப் பூவிலுள்ள விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

* தாமரை பூ இதயத்திற்கு பலமளிக்கும். உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

* வேப்பம் பூ சிறந்த கிருமி நாசி‌னி. வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும். வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப்பூ கைக்கண்ட மருந்து.

* தூதுளம் பூ உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.

Labels:

கனவுகள்..... - பிளேட்டோ

நல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்திலும் அடக்க முடியாத சில மிருகப் பிராந்தியமான இச்சைகள் இருக்கின்றன. அவை மனிதன் உறங்கும் போது கனவுகளாக வெளிப்படுகின்றன.

அன்றாட வாழ்க்கையைப் பரிசுத்தமாகவும், நிதானமாகவும் நடத்திச் செல்பவன், உறங்கப்போவதற்கு முன் மிதமாக உணவருந்தித் தன் மனதிலுள்ள இச்சைகளையும் கோபதாபம் முதலான உணர்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு, உறங்குவானாகில் அவன் கெட்ட கனவுகள் காணமாட்டான்..

Labels: ,

கோடீஸ்வரனின் கருணை -..-

(OSHO's story)
ஒரு கோடீஸ்வரன் தபால் அலுவலகத்திற்கு வந்தான். அங்கு இரண்டு முதியவர்கள் தங்களது ஓய்வூதியத்தைப் பெற வரிசையில் நின்றிருந்தனர்.

அவர்களைக் கண்டதும் கோடீஸ்வரனின் உள்ளத்தில் கருணை பிறந்தது. இவர்களை ஒரு வாரகாலம் தன் மாளிகையில் தங்க வைத்து சகல வசதிகளையும் செய்து கொடுத்து ஆனந்தமாக இருக்கச் செய்ய வேண்டும் என்று கருதினான்.

எனவே அம்முதியவர்களை அணுகி தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவர்கள் சம்மதித்தார்கள். தனது விலையுயர்ந்த காரில் அவர்களை தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு வேண்டிய வசதியான அறைகளையும் ஒதிக்கிக் கொடுத்தான்.

அவர்கள் இருவரும் கண்டறியாதன கண்டதாக ஆனந்தமாக அந்த வாழ்வை அனுபவித்து வந்தனர். அன்று வாரத்தின் கடைசி நாள். முதியவர்கள் இருவருக்கும் விடை தர வேண்டிய நாள். அவர்களை சந்திக்க கோடீஸ்வரன் வந்தான்.

முதியவர்களில் ஒருவர் அங்கிருக்கும் நூலகத்தில் இருந்தார். கையில் மதுவும், வாயில் சுருட்டுடனும் இருந்த அவரை நெருங்கி கோடீஸ்வர்ன கேட்டான்.

"ஆனந்தமாக இருந்தீர்களா?"

"மிகவும் உல்லாசமாக அனுபவித்தேன். ஆனால் ஒரு கேள்வி!...." என்றார் முதியவர். "கேளுங்கள்" என்றான் கோடீஸ்வரன்.

முதியவர் கேட்டார்;

"ஒரு வாரமாக என்னுடன் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி யார்?..."

கோடீஸ்வரன் (!!!!!!!!!!!!!).......

Labels:

கா‌ய்க‌றி ம‌ஞ்சூ‌ரிய‌ன்

தேவையான பொருட்கள்:-

கேர‌ட் - 1
கோ‌ஸ் - 1 து‌ண்டு
உருளை‌க் ‌கிழ‌ங்கு - 2
‌ப‌ச்சை ‌மிளகா‌ய் - 2
பூ‌ண்டு - 4 ப‌ல்லு
சோள மாவு - 4 தே‌க்கர‌ண்டி
எ‌ண்‌ணெ‌ய் - பொ‌றி‌க்க‌த் தேவையான அளவு
சோயா சா‌ஸ் - 1 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது
‌மிளகு தூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறை:-

கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு வேக வை‌த்து எடு‌‌த்து ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் சோள மாவு, அரை‌த்த ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது, உ‌ப்பு சே‌ர்‌த்து‌ ‌பிசை‌யவு‌ம்.

அதனை ‌சிறு ‌சிறு உரு‌ண்டைகளாக உரு‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி இ‌ந்த உரு‌ண்டைகளை அ‌தி‌ல் போ‌ட்டு ந‌ன்கு வேக‌வி‌ட்டு எடு‌க்கவு‌ம்.

வேறொரு வாண‌லி‌யி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சூடானது‌ம் பூ‌ண்டு ‌விழுது, ப‌ச்சை ‌மிளகா‌ய், வெ‌ங்காய‌த் தா‌ள் போ‌ட்டு வத‌க்கவு‌ம். அ‌தி‌ல் ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி உ‌ப்பு, ‌மிளகு தூ‌ள், சோயா சா‌ஸ் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.

இ‌ந்த கரைச‌ல் சு‌ண்டி வரு‌ம் போது வறு‌த்த உரு‌ண்டைகளை‌ப் போ‌ட்டு மெதுவாக ‌கிள‌றி ‌விடவு‌ம்.

5 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி ப‌ரிமாறவு‌ம்.

Labels:

உன் தலை முடி - காதலில் விழுந்தேன்

Labels:

விண்ஸிப் 14 ன் சிறப்பு!

பைல்களைச் சுருக்கி அமைக்கவும், பின் அவற்றை விரித்துப் பயன்படுத்தவும் விண்ஸிப் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராம் ஆகும். இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இதன் சோதனைப் பதிப்பு இலவசமாக இதன் நிறுவனத்தால் வழங்கப்படுவதால், பலரும் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, அதன் பல வசதிகளைப் பயன்படுத்தி விண்ஸிப் புரோகிராமின் புதிய பதிப்பு 14 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் சோதனைப் பதிப்பு இலவசமாகக் கிடைக்கிறது.

விண்டோஸ் 7 தரும் லைப்ரரி மற்றும் ஜம்ப் லிஸ்ட் வசதிகளை விண்ஸிப் 14 நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வந்தது போன்ற பயன்பாட்டு எளிமையை இது தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களில் உள்ள பைல்களை விண்டோஸ் 7 லைப்ரரி மூலம் ஸிப் செய்திடலாம். பைல்கள் எங்கிருந்தாலும் அவற்றை மொத்தமாக ஒரு ஸிப் பைலில் கொண்டு வரலாம். இந்த வசதி இதற்கு முன் இல்லை. விண்ஸிப் புரோகிராமினை ஜம்ப் லிஸ்ட்டில் இணைத்து வைக்கலாம். தேவைப்படுகையில் இதனைக் கிளிக் செய்து நேரடியாகப் பயன்படுத்தலாம். பைல்களைச் சுருக்கலாம்; விரித்துப் பயன்படுத்தலாம்.

விண் ஸிப் 14, விண்டோஸ் 7 வசதிகளைப் பயன்படுத்தினாலும், இதற்கு முன் உள்ள விண்டோஸ் சிஸ்டங்களுடனும் பயன்படுத்தலாம்.

இந்த பதிப்பில் சுருக்கப்பட்ட பைல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தானாகவே தற்காலிகமாகத் தான் உருவாக்கிய பைல்களை அழிக்கிறது. சுருக்கப்பட்ட பைல்களின் நகல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றையும் நீக்குகிறது. பைல்களை முன்னதாகப் பார்ப்பதற்கு மட்டும் என உருவாக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அழிக்கிறது.

மேலே சொல்லப்பட்ட வசதிகள் அனைத்தும்,ஏற்கனவே விண்ஸிப் புரோகிராம்களில் தரப்பட்ட வசதிகள் அனைத்திற்கும் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன. இந்த விண்ஸிப் பதிப்பில் .zipx என்னும் கம்ப்ரஸன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான சுருக்கும் நிலையைக் காட்டிலும், கூடுதலாக சிறிய அளவில் பைல்களைச் சுருக்குகிறது. ஏற்கனவே சுருக்கப்பட்ட வடிவில் இருக்கும் .jpg பைல்களை மேலும் 20% சுருக்குகிறது.
50 டாலர் கூடுதலாகச் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடன் விண்ஸிப் 14 கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி பைல்களை சிடி மற்றும் டிவிடிக்களில் எழுதலாம்.

வழக்கம்போல விண்ஸிப் 14 பதிப்பின் சோதனைக்குத் தரப்படும் புரோகிராமினைhttp://www.winzip.com/ என்ற முகவரியில் பெறலாம்.

Labels: