தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


வேர்ட் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்

வேர்ட் தொகுப்பு இயங்கும் விதம் சில நேரங்களில் எனக்குப் பிடிக்க வில்லை. தேவையற்ற வகையில் குறுக்கீடுகளாக இவை எனக்குத் தோன்றுகின்றன. பொதுவாக இந்த குறுக்கீடுகளை நிறுத்திட என்ன செய்யலாம்?

பலவகையான செட்டிங்குகள் Tools மெனுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒருவகையான செயல்பாட்டிற்கென இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் செயல்பாடு எந்த டேபில் இருக்கிறது என்பதனைத் தேடி அறிந்து அதனை மாற்றலாம். பெரும்பாலும் அந்த செயல்பாடுகள் குறித்த சொல் தொடரும் அதன் எதிரே சிறு கட்டமும் இருக்கும். கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்துவிட்டால் அந்த செயல் நடைபெறாது. Customize என்னும் கட்டளை வேர்டின் மெனுக்களையும் டூல் பார்களையும் மாற்றி அமைக்க உதவும். View மெனு வேர்ட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடும்.

தேவையற்ற வகையில் புல்லட் பாய்ண்ட் அல்லது எண்களைத் தரும் வேர்டை எப்படி அது இல்லாதவாறு நிறுத்தலாம்?

வேர்ட் தரும் முக்கிய வசதி நாம் டைப் செய்திடுகையில் அது தரும் உதவிதான். பிழையான சொற்களைத் திருத்த வழி தருகிறது. நாம் டைப் செய்கையில் தானாகவே பார்மட் செய்கிறது. 1,2,3 என அடிக்கத் தொடங்கினால் புல்லட் பாய்ண்ட்டினைக் கொடுத்து பார்மட் செய்கிறது. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நிறுத்திவிடலாம். Tools மெனு சென்று Auto Correct டேப் கிளிக் செய்து நமக்குத் தேவயற்ற சொல் திருத்தத்தினை நிறுத்தலாம். அல்லது எந்த திருத்தங்கள் நமக்கு தேவையில்லை என எண்ணுகிறோமோ அவற்றை நீக்கலாம். பின் மீண்டும் தேவை என முடிவு செய்கையில் டிக் அடையாளம் ஏற்படுத்தி செயல்படுத்தலாம். நான் அதிகம் தமிழ் டெக்ஸ்ட் டைப் செய்கிறேன். எப்போதும் சொற்களின் கீழே சிகப்பு கோடுகள் போடப்படுகின்றன. தமிழ் என்றால் ஏன் இவ்வாறு கோடுகள் வருகின்றன? இவற்றை நிறுத்துவது எப்படி?

வேர்ட் தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் என்று உணர்ந்து உங்கள் கீ அழுத்தத்திற்கு நேரான எழுத்துக்களையும் சொற்களையும் எடுத்துக் கொண்டு அவை தவறான ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணம் உடையவை என்ற அடிப்படையில் சிகப்பு கோட்டினைத் தருகிறது. இந்த செயல்பாட்டினை நீக்க எளிதான வழி எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை காணும் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுதான். Check spelling as you type மற்றும் Check grammar as you type என இரு வசதிகளை Edit டேபின் கீழே பார்க்கலாம். இவற்றின் முன் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டால் சிகப்பு கோடுகள் வராது.

அடிக்கடி ஆபீஸ் அசிஸ் டன்ட் என்ற பெயரில் ஒரு சிறிய உருவம் திரையில் வந்து நம் கவனத்தை ஈர்க்கிறது. சில வேளைகளில் அந்த இடத்தில் டைப் செய்கையில் எழுத் துக்களை மறைக்கிறது. இதனை எப்படி இல்லாமல் செய்வது?

Office Assistant மேலேயே ரைட் கிளிக் செய்திடுங்கள். அதன் பின் Options என்பதில் கிளிக் செய்திடுங்கள். Use Office Assistant என்ற வரியின் முன் உள்ள சிறிய பெட்டியைல் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள்.

ஸ்கிரீனின் வலது பக்கம் ஒரு பகுதி வருகிறது. இதனை டாஸ்க் பேன் என்கின்றனர். எனக்கு இது தேவையில்லை. எப்படி நிறுத்துவது?

நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களின் வலது பக்கம் இந்த டாஸ்க் பேன்கள் கிடைக்கின்றன. இதற்கான கட்டளைகளின் அடிப்படையில் அதில் ஆப்ஷன்ஸ் மாறும். இந்த டாஸ்க் பேன் தேவையில்லை என்றால் அதில் உள்ள பெருக்கல் அடையாளத்தில் கிளிக் செய்தால் மறைந்துவிடும். வியூ மெனுவில் கிடைக்கும் ஆப்ஷன்கள் மூலமாக இதனை மூடிவிடலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட் பைல்களைத் திறக்கையில் முந்தைய டாகுமெண்ட்களின் விண்டோ எங்கு செல்கிறது? எப்படி அனைத்தையும் திறந்து பார்ப்பது?

ஒவ்வொரு புதிய டாகுமெண்ட்டும் தனியான விண்டோவில் திறக்கப்படும். அப்போது ஏற்கனவே உள்ள பைலின் விண்டோ பின்னால் இருக்கும். விண்டோ மெனு சென்றால் பைல்களின் பெயர்களைப் பார்த்து கிளிக் செய்து பெறலாம். இவை டாஸ்க் பாரிலும் காட்டப்படும். அங்கிருந்தும் கிளிக் செய்து பெறலாம். அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண் டும் என்றால் Window மெனு சென்று Arrange All என்பதைக் கிளிக் செய்திடுங்கள். மேலும் மாற்றி மாற்றி டாகுமெண்ட்களைக் காண Alt +Tab அழுத்துங்கள்.

டூல்பாரில் பல பட்டன்கள் உள்ளன? எது எதற்கு என்று அறிய அதன் பெயரை எப்படித் தெரிந்து கொள்வது?

மவுஸைக் கொண்டு போய் அந்த டூல்பாரின் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் காட்டப்படும்.

ரூலரைப் பெற என்ன செய்திட வேண்டும்?

View மெனு சென்று Ruler என்பதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இதில் உங்கள் வியூ பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால் தான் மேலே உள்ள ரூலர் தெரியும்.

டூல் பாரில் பட்டன்களைச் சேர்க்கவும் நீக்கவும் என்ன செய்திட வேண்டும்?

1.View மெனுவில் இருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும்.

2. Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Commands என்னும் டேபினைக் கிளிக் செய்திடவும்.
4. Categories என்னும் பிரிவில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அங்கு காட்டப்படும் Commands பிரிவில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
6. இந்தக் கட்டளையை Toolbar ஒன்றுக்கு இழுத்து வரவும். “I” பீம் ஒன்று காட்டப்படும். இது புதிய தேர்ந்தெடுத்ததனை இன்ஸ்டால் செய்திட உங்களுக்கு வழி காட்டும். புதிய பட்டனில் டெக்ஸ்ட் லேபில் மட்டுமே இருக்கும்.
7. புதிய Toolbar பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.
8. Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். (இப்போது பட்டன் சிறிய சதுரமாக மாறும்)
9. மீண்டும் புதிய Toolbar பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.
10. Change பட்டன் இமேஜைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஒரு பட்டன் இமேஜைத் தேர்ந்தெடுக்கவும்.
11. பின் Customize டயலாக் பாக்ஸை மூடவும்.

பட்டனை நீக்க:

View மெனுவில் இருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும். Customize என்பதை அடுத்து தேர்ந் தெடுக்கவும். எந்த பட்டனை நீக்க வேண்டுமோ அதனை டூல் பாரிலிருந்து இழுத்துவிடவும்.

நார்மல் டெம்ப்ளேட் என்பது என்ன?

வேர்ட் தொகுப்பைத் தொடங்கும் போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.

Labels:

சிஸ்டம் டிப்ஸ்

திறந்திருக்கும் அனைத்து விண்டோக் களையும் மினிமைஸ் செய்திட மவுஸ் மூலம் ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திடலாம். மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் கீ + எம் (Windows key+M) கீகளை அழுத்தவும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் மினிமைஸ் செய்யப்படும். இவை அனைத்தையும் மீண்டும் பெற விண்டோஸ் கீ + ஷிப்ட் + எம் கீகளை (Windows key+Shift+M) அழுத்தவும். இந்த புரோகிராம் களை ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திட Alt+Space+N கீகளை அழுத்தவும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் மேக்ஸிமைஸ் செய்திட Alt+Space+X கீகளை அழுத்தவும்.

ஸ்டார்ட் மெனுவில் ஷார்ட்கட்

ஏதேனும் புரோகிராம் அல்லது பைலுக்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறுமாறு செய்திடலாம். இதற்கு டெஸ்க் டாப்பில் உள்ள அந்த ஷார்ட் கட் ஐகானை மவுஸால் இழுத்து வந்து ஸ்டார்ட் பட்டனில் விட்டுவிடவும். இனி ஸ்டார் பட்டனில் கிளிக் செய்து பார்த்து அந்த ஷார்ட் கட் மெனுவில் உள்ளதை உறுதி செய்திடவும்.

Labels:

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

நண்பர்களே நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது நீங்கள் உங்கள் நண்பருக்கு திட்டி மெயில் அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி நினைத்திர்கள் என்றால் அது முடியும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து என்றால் முடியாது. சரி அடுத்த விநாடி திரும்ப பெற வேண்டும் என்றால் நான் முதலில் கூறியது போன்றது இது முற்றிலும் ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு மட்டும். ஜிமெயில் நிர்வாகத்தினர் இப்பொழுது நீங்கள் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் உரிமையை தந்திருக்கிறார்கள்

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலதுபுறம் மேலே செட்டிங்ஸ் கிளிக் செய்து அதில் Labs என்பதனை கிளிக் செய்யுங்கள்.

அதில் Undo Send என்பதை Enabled செய்து கீழே வந்து Save Changes கிளிக் செய்து வெளியேறுங்கள். இப்பொழுது உங்களுக்கு மேலே சொன்ன உரிமை கிடைக்கும்.

சோர்ஸ் & தேங்க்ஸ் : tamilcomputer.ch

Labels:

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

நண்பர்களே நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது நீங்கள் உங்கள் நண்பருக்கு திட்டி மெயில் அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி நினைத்திர்கள் என்றால் அது முடியும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து என்றால் முடியாது. சரி அடுத்த விநாடி திரும்ப பெற வேண்டும் என்றால் நான் முதலில் கூறியது போன்றது இது முற்றிலும் ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு மட்டும். ஜிமெயில் நிர்வாகத்தினர் இப்பொழுது நீங்கள் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் உரிமையை தந்திருக்கிறார்கள்

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலதுபுறம் மேலே செட்டிங்ஸ் கிளிக் செய்து அதில் Labs என்பதனை கிளிக் செய்யுங்கள்.

அதில் Undo Send என்பதை Enabled செய்து கீழே வந்து Save Changes கிளிக் செய்து வெளியேறுங்கள். இப்பொழுது உங்களுக்கு மேலே சொன்ன உரிமை கிடைக்கும்.

சோர்ஸ் & தேங்க்ஸ் : tamilcomputer.ch

Labels:

கோப்பு வடிவங்களை மாற்ற

ஒரு கோப்பு வடிவில் (file type) இருந்து வேறொரு கோப்பு வடிவிற்கு மாற்றுவதற்கு நிறைய இணைய தளங்களின் சேவைகள் இலவசமாக (free service) வழங்கப்படுகின்றன.

ஆனால் அவற்றின் மூலம் சில குறிப்பிட்ட வடிவ கோப்புகளை மட்டுமே, மற்றொரு வடிவிற்கு மாற்ற முடியும். கணினி என்னும் சமுத்திரத்தில் எண்ணற்ற கோப்புகள் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில். இதற்காக எந்த மென்பொருளையும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யாமல் கோப்பு வடிவங்களை மாற்றுவதற்காக உள்ள இணையதளம் http://www.convertfiles.com/


100+ கோப்புகளை இந்ததளம் ஆதரிக்கிறது. நம் கணினியில் உள்ள கோப்பு (அ) இணையத்தில் ஏற்கனவே எங்கோ உள்ள கோப்பு ஒன்றின் யுஆரெல் (URL), நமது மின்னஞ்சல் முகவரி, மேலும் எந்த வடிவிற்கு மாற்றப் போகிறோம் என்பதை உள்ளீடு செய்தல் வேண்டும்.

வடிவு மாற்றப்பட்ட பிறகு உங்களுக்கு வரும் மின்னஞ்சலைத் திறந்து அங்கே உள்ள லின்க்கைச் (link) சொடுக்கினால் போதும். மூன்று நாட்கள் வரை அந்த சுட்டிக்கு உத்திரவாதம் (validity) உண்டு. அதற்குள் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் (download) செய்துவிடவேண்டும்.

http://www.convertfiles.com/

Labels:

ஒவ்வொரு உலவியிலும் உங்கள் வலைப்பக்கம் எப்படிக் காட்சியளிக்கிறது?

உங்கள் வலைப்பக்கம் / இணையப்பக்கம் - ஆனது ஒவ்வொரு தனிப்பட்ட உலவி @ browser லும் எப்படிக் காட்சியளிக்கிறது என்பதை அறிவதற்காக Adobe நிறுவனத்தின் இந்தச் சேவை வாயிலாக உறுதி செய்துகொள்ளலாம்.

நாம் புதியதாக உருவாக்கிய ஒரு வலைப்பக்கம் / இணையப்பக்கமானது ஒவ்வொரு உலவியிலும் வெவ்வேறு மாதிரியாகக் காட்சியளிக்கும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம் - உலவிகளுக்குள் இடையே நிலவும் Javascript ஒவ்வாமைப் பிரச்சினைகளே ஆகும்.


Internet explorer வழியாக திரையில் பார்த்தால் தெளிவாகத் தெரியக்கூடிய பக்கமானது, Safari வழியாக கண்ணாபின்னாவென்று தெரியக்கூடிய அபாயம் உள்ளது. நமது கணினியில் ஒவ்வொரு உலவியாக நிறுவி ஒவ்வொன்றின் வாயிலாகவும் வலைப்பக்கங்களைச் சோதித்து அறிவது மிகக் கடினம்.

Chrome, Opera மற்றும் சில Linux ற்கான உலவிகளை இங்கே சோதித்தறிய இயலாது

Firefox, Internet Explorer & Safari இந்த உலவிகளை Mac and Windows ஆகிய தனித்தனி இயங்குதளத்தின் வாயிலாக சோதித்தறிய ஒரு அறிய வாய்ப்பு

Adobe Flash Player version 10.0.0 அல்லது அதற்கு மேலே உங்கள் கணினியில் நிறுவி இருத்தல் வேண்டும். உலவியில் ஜாவாஸ்க்ரிப்டின் இயக்கத்தை அனுமதி அளித்திருக்க வேண்டும்.

அடோபி உலவிச்சோதனைக்கான சுட்டி https://browserlab.adobe.com/index.html

Labels:

உங்கள் வலைப்பூவை Bing தேடுபொறியில் சேர்ப்பதற்கு

கூகிள் தேடுபொறியில் (Google Search engine) நமது வலைப்பூ முகவரியை (blog / web site address) உள்ளிட்டால் முதலில் - முதல் பக்கத்தில் - நமது வலைப்பூ வந்துவிடும்.

ஆனால் Bing தேடுபொறி (Bing Search Engine) மிகப் புதியது. அதில் தேடினால் முதல்பக்கத்தில் நமது வலைப்பூ வருமா? வரவைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.

நமது வலைப்பூவை Bing பொறியில் நாமே சேர்த்திடலாம்.

Bing தேடுபொறியில் இணைப்பதற்கு உங்களது Hotmail / live ID வாயிலாக உள் நுழைந்திருத்தல் அவசியம்.

இதற்கான சுட்டி : http://www.bing.com/webmaster/WebmasterAddSitesPage.aspx

அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் திரையில் சில கேள்விகள் கேட்கப்படும்.

அதில் website முகவரி, webmaster மின்னஞ்சல் முகவரி இவற்றை இடவும். பின் submit கொடுக்கவும்.

பின் அது கொடுக்கும் meta tag ஒன்றை உங்கள் வலைப்பூவின் head பகுதியில் சேர்த்து விடவும்.

Please do the following steps to add meta tag to your blog.

Please open Blogger.com - Layout - Edit HTML - Expand Widget Templates

Please search for

just paste the meta info given by Bing.com under the head tag.

உங்கள் வலைப்பூவானது பிங் தேடுபொறியில் Index ஆகிவிடும்.

*********************************************************************

Labels:

விசுவல் பேசிக்கில் பட்டையைக் கிளப்ப

Java மொழியை விரும்பிக் கற்றவர்கள் கூட Visual Basic பக்கம் எப்போதாவது மழைக்கு ஒதுங்கியது போல் ஓரக்கண்ணால் பார்த்திருப்பார்கள். மிக எளிமையானதாகவும், சுலபத்தில் கற்றுத் தேர்வதற்கு வசதியாகவும் அமைந்தது இது.Read more »

Labels:

இயற்கையின் அனைப்பில் - கணிணி

Labels:

து‌ள‌சி செடியின் மாபெரும் பய‌ன்கள்!

துளசி நம் உடலில் உ‌ள்ள கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

துள‌‌சி‌யி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு. ந‌ம் ‌வீடுக‌ளி‌ல் இரு‌க்கு‌ம் சாதாரண துள‌சி‌யி‌ல் எ‌த்தனையோ ம‌கிமைக‌ள் உ‌ண்டு.
‌கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம், உடலை தூ‌ய்மை‌ப்படு‌‌த்து‌ம் பொருளாகவு‌‌ம் அது செய‌ல்படு‌கிறது. ச‌ளி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு‌ம் துள‌சி மரு‌ந்தாக அமையு‌ம்.

துளசி‌ச் செடி‌யி‌ன் இலைகளை அ‌வ்வ‌ப்போது சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் எந்த நோயும் நம்மை அணுகாது.

கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம்.

துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உட‌லி‌ன் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி‌க்கு உதவு‌ம்.

Labels: