தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


வெற்றிக்கான வழி் - லெனின்!

தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி.

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

Labels: ,

விரும்பிய காட்சிகளை வெட்ட!

நாம் வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நல்லது என்று எண்ணுவோம். குறிப்பாக ஒரு நடனக் காட்சி அல்லது காமெடி நம்மைக் கவரலாம். அப்போது எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ள காட்சியை மட்டும் தனியே பிரித்து பைலாகக் கொள்வது என்ற பிரச்சினை உங்களுக்கு ஏற்படும். இந்த பிரச்சினயைத் தீர்க்க வீடியோ கட்டர் http://www.freevideocutter.com/ என்ற புரோகிராம் இலவசமாக என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது.

இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்த பின் புரோகிராமினை இயக்கவும். பின் "Open Video" என்ற கட்டளையைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புரோகிராம் அந்த வீடியோவின் பார்மட், பிட் ரேட், பிளே ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப்நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும். ட்ரேக் பாரில் இடது பக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும். வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற பார்மட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது. நீங்கள் பதிய விரும்பும் பார்மட்டினையும் இதில் முடிவு செய்திடலாம்.

பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த பார்மட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஆடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய்திடலாம்.

Labels:

அல்சரை போக்கும் பச்சைவாழை

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

Labels:

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Labels:

ஞானி பற்றி - சாக்ரடீஸ் கூற்று!

ஞானமடைந்தவன் ஒவ்வொருவனும் உடலை விட்டுப் போகவே விரும்புவான். ஆனால் பலவந்தமாய் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பமாட்டான். நாம் அனைவரும் கடவுளின் பாதுகாப்பிலிருக்கிறோம். நாம் நம்மை நாம் வதைத்துக்கொள்ள நமக்கு உரிமையில்லை. கடவுள் நமக்கு விடுதலையளிக்கும் வரையிலும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஞானியினுடைய ஆத்மா, தன்னைச் சிறைப்படுத்தியுள்ள உடலைவிட்டுத் தனியாகிவிடவே. எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கும்.

என்னை எல்லோரும் ஞானி என்கிறார்கள். ஆனால் எனக்கு மாத்திரமே தெரியும். எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது.

யார் தன் வாழ்நாளில் ஐம்புலன்களை அடக்கி, உடல் வழியாய் வரும் இன்ப துன்பங்களை நீக்கி ஆத்மஞானம், நிடுநிலை, தர்மம், அச்சமின்மை, அவாவின்மை, வாய்மை ஆகியவற்றை வளர்த்து வருகிறானோ, அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. தன் ஆத்மா நற்கதியடையும் என்று அவன் நம்பிக்கையுடனிருக்கலாம்.

தவறான பேச்சுக்களால், பேச்சுமாத்திரம் கெட்டுப்போவதில்லை. ஆத்ம ஞானமும் கெட்டுப் போய்த் துன்பம் உண்டாகிறது.

Labels: ,

எதற்கு இன்டர்நெட் ஹிஸ்டரி?

இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 பயன்படுத்தும் புதியவரா நீங்கள்? அல்லது வெகு நாட்க ளாகவே பயன்படுத்தி வருகிறீர்களா?

இன்டர்நெட்டில் எந்த தளங்களுக்கெல்லாம் நீங்கள் அல்லது உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒருவர் சென்று பிரவுஸ் செய்துள்ளார் என்று காட்டும் இடமே இன்டர்நெட் ஹிஸ்டரி. நீங்கள் சென்ற தளம் அல்லது குடும்பத்தில் ஒருவர் சென்ற தளம் குறித்து அறிய நீங்கள் முயற்சிக்கையில் இது உதவும். அல்லது ஏற்கனவே நீங்கள் சென்ற பயனுள்ள தளம் ஒன்றின் முகவரி உங்களுக்கு மறந்து போயிருக்கலாம்.

அதனைப் பெறவும் இந்த ஹிஸ்டரி உதவும். ஒரு நாளில் சராசரியாக எத்தனை வெப்சைட்டுகளுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள் என்று அறியவும் நீங்கள் முயற்சிக்கும் போதும் இது உதவும். உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் உங்கள் பிரவுசர் ஹிஸ்டரியினை நீங்கள் அவ்வப்போது சென்று பார்ப்பது நல்லது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 தொகுப்பில் ஹிஸ்டரி பட்டன் நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனைக் காண வழி தரப்பட்டுள்ளது. இடது மூலையில் ஒரு சிறிய ஸ்டார் ஐகானை நீங்கள் காணலாம். அதில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ஹிஸ்டரி என்று இருப்பதில் உள்ள சிறிய அம்புக்குறி மீது கிளிக் செய்தால் கீழாக ஒரு மெனு கிடைக்கும். அந்த மெனுவில் உள்ள பிரிவுகளில் பை டேட் என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள்.

உடனே உங்கள் இன்டர்நெட் ஹிஸ்டரி கிடைக்கும். வரிசையாக உங்கள் தேடுதலுக்கேற்ற வகையில் நீங்கள் சென்று பிரவுஸ் செய்த தளங்களின் பட்டியல் கிடைக்கும். இந்த தளங்களில் காட்டப்படும் வெப்சைட் முகவரிகளில் மீது கிளிக் செய்தும் நீங்கள் அந்த தளங்களுக்குச் செல்லலாம். தேதி வாரியாக, தளங்கள் வரிசையாக, இன்று பார்த்த தளங்கள், அடிக்கடி சென்று பார்த்த தளங்கள் என வகை வகையாக இவற்றைப் பார்க்கலாம். இந்த பட்டியல்களில் இருந்து தளங்களின் முகவரிகளை நீக்கவும் செய்திடலாம்.

Labels:

நினைவுதிறனை அதிகரி‌க்க உளு‌ந்து!

உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் ‘உளுந்து’ எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. இந்த உளுந்து, இதைக் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.

உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.

விஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்.

Labels:

அரசனை உதைத்த கோமாளி!

(OSHO's story)
ஒரு அரசன் தன்னை மகிழ்விப்பதற்காக ஒரு கோமாளியை நியமித்திருந்தான். ஒரு நாள் அரசன் கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோமாளி காலை எட்டி அரசன் முதுகில் உதைத்தான். இதை சற்றும் எதிர்பாராத அரசன் தடுமாறி, கண்ணாடியில் மோதிக்கொண்டான்.

கோபம் கொண்ட அரசன் கோமாளியைப் பார்த்துச் சொன்னான்;

'முட்டாள் தனமான உன்னுடைய இந்தச் செயலுக்கான தகுந்த சமாதானத்தைச் சொல்லாவிட்டால் உனக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.'

பயந்தவாறு கோமாளி சொன்னான்;

'அரசே தாங்கள் இங்கு இருப்பீர்கள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. அரசியார்தான் இங்கு நின்று கொண்டிருப்பதாக நினைத்தேன்'

அவன் மன்னிக்கப்பட்டான். ஏனெனில் அவன் செய்ததை விட முட்டாள் தனமான காரணத்தைச் சொல்லிவிட்டான். ஆனால் இதற்கான காரணத்தை உணர்ந்து கொண்ட அரசன் அறிவுள்ளவனாகத்தானே இருக்க வேண்டும்...

Labels: