விரும்பிய காட்சிகளை வெட்ட!
நாம் வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நல்லது என்று எண்ணுவோம். குறிப்பாக ஒரு நடனக் காட்சி அல்லது காமெடி நம்மைக் கவரலாம். அப்போது எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ள காட்சியை மட்டும் தனியே பிரித்து பைலாகக் கொள்வது என்ற பிரச்சினை உங்களுக்கு ஏற்படும். இந்த பிரச்சினயைத் தீர்க்க வீடியோ கட்டர் http://www.freevideocutter.com/ என்ற புரோகிராம் இலவசமாக என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது.
இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்த பின் புரோகிராமினை இயக்கவும். பின் "Open Video" என்ற கட்டளையைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புரோகிராம் அந்த வீடியோவின் பார்மட், பிட் ரேட், பிளே ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப்நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும். ட்ரேக் பாரில் இடது பக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும். வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற பார்மட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது. நீங்கள் பதிய விரும்பும் பார்மட்டினையும் இதில் முடிவு செய்திடலாம்.
பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த பார்மட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஆடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய்திடலாம்.
Labels: computer
0 Comments:
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI