தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


குடியாட்சி அரசாங்கம்!! - சாக்ரடீஸ்

இம்முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதில் தலைவர்கள் அல்லது வல்லுநர்கள் சிறப்பான அறிவுத் திறமையைப் பெற்றிருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய சான்று எதுவும் இல்லை.

குடியாட்சி அரசாங்கத்தில் மக்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள்களை வரையறுக்கும் பொறுப்பு அரசாங்கத்தை நடத்துவதற்குப் போதிய செயலறிவு அற்ற மக்களிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் ஓர் ஆட்சிக் கொள்கை ஒழுக்க செயலுக்கு அல்லது நீதிக்குப் பொருந்தி இருக்கிறதா என்று தீர்மானிப்பதற்கு உரிய மன வளர்ச்சி அல்லது மதிப்பு மக்கள் எல்லோரிடத்திலுமே சமமாகக் காணப்படுகிறதென்று பிழையாகக் குடியாட்சி அரசாங்கம் கருதுகிறது.

அரசு அறிவு வாய்ந்த குழுவினருடைய ஆட்சியில் இருத்தல் வேண்டும். மனிதர் சமமானவர் என்ற அடிப்படையில், திருவுளச் சீட்டு முறையில் அலுவலர்களை அமர்த்துகிற அதீனியக் குடியாட்சி கண்டிக்கப்படத் தக்கதாகும்.

Labels: ,

ஞானி பற்றி - சாக்ரடீஸ் கூற்று!

ஞானமடைந்தவன் ஒவ்வொருவனும் உடலை விட்டுப் போகவே விரும்புவான். ஆனால் பலவந்தமாய் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பமாட்டான். நாம் அனைவரும் கடவுளின் பாதுகாப்பிலிருக்கிறோம். நாம் நம்மை நாம் வதைத்துக்கொள்ள நமக்கு உரிமையில்லை. கடவுள் நமக்கு விடுதலையளிக்கும் வரையிலும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஞானியினுடைய ஆத்மா, தன்னைச் சிறைப்படுத்தியுள்ள உடலைவிட்டுத் தனியாகிவிடவே. எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கும்.

என்னை எல்லோரும் ஞானி என்கிறார்கள். ஆனால் எனக்கு மாத்திரமே தெரியும். எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது.

யார் தன் வாழ்நாளில் ஐம்புலன்களை அடக்கி, உடல் வழியாய் வரும் இன்ப துன்பங்களை நீக்கி ஆத்மஞானம், நிடுநிலை, தர்மம், அச்சமின்மை, அவாவின்மை, வாய்மை ஆகியவற்றை வளர்த்து வருகிறானோ, அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. தன் ஆத்மா நற்கதியடையும் என்று அவன் நம்பிக்கையுடனிருக்கலாம்.

தவறான பேச்சுக்களால், பேச்சுமாத்திரம் கெட்டுப்போவதில்லை. ஆத்ம ஞானமும் கெட்டுப் போய்த் துன்பம் உண்டாகிறது.

Labels: ,

வாழ்வியல்


நீ எப்படி வாழ விரும்புகிறாய் என்பதற்கான உன் தளரா முயற்சியினாலேயே நீ பிறருடைய பாராட்டினைச் சம்பாதிக்கமுடியும்.

புற அழகை விட்டுத்தள்ளுங்கள்; அக அழகை அளித்தமைக்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்துங்கள்!

மனச்சாட்சித் தெளிவில்லாமல் பிறரைக்காட்டிலும் நல்ல முறையில் வாழ்வதாக, யாராலும் தோற்றமளிக்க முடியாது.

திருப்தி என்பது இயற்கைச் செல்வம், ஆடம்பரம் என்பது செயற்கை வறுமை.

ஒரு நல்ல மனிதனுக்கு வாழ்க்கையிலும் சரி, மரணத்திலும் சரி எந்தத்தீங்கும் நேர்ந்து விடாது என்பது உண்மை.  எனவே மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வோம்.

Labels: ,