தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தில் ஆபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்

சென்னை: சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கு அங்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தொடர்பு கொண்டு உதவி கோருவதற்கு வசதியாக தொலைபேசி எண்களை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

இதற்காக எல்லையில் தனி கட்டுப்பாட்டு அறையை காவல்துறை திறந்துள்ளது. அதன்படி கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், 094474 74009 மற்றும் 04869 224252 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தப் பாதை வழியாக செல்லலாம்?

தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட பதட்டத்தால் குமுளி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. 

இதனால், நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாகவும், குமரி மாவட்டம் வழியாகவும், கோவை மாவட்டம் வழியாகவும் வாகனங்கள் செல்லலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

போடிமெட்டு பகுதி வழியாகவும் முன்னர் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஆனால் அது தற்போது நின்று விட்டது.

Labels:

1 Comments:

At December 7, 2011 at 1:33 PM , Blogger yuvatirupur said...

நேரத்திற்கு தேவையான பதிவு...

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator