தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


மரவள்ளிக்கிழங்கும், ஜவ்வரிசி தொழிலும்

தமிழ்நாட்டின் வேறுபல மாவட்டங்களுக்கு இல்லாத பல தனி சிறப்புகள் சேலம் மாவட்டத்துக்கு உண்டு.  அத்தகைய சிறப்புகளில் சேலம் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் ஜவ்வரிசி தொழிலும் பக்கத்து மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியில் 1 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த ஜவ்வரிசி தொழில்தான் வாழ்வின் ஆதாரமாக விளங்கி வருகிறது.  அதற்கு காரணம் இந்த மாவட்டத்தின் மண்வளம்தான்.  இங்குள்ள மண்வளத்தால் சேலம் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களின் சில பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பிரதான விவசாயமாக நடந்து வருகிறது.

மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தால் விவசாயிகள் மட்டுமல்ல அந்த கிழங்கில் இருந்து ஸ்டார்ச் (கிழங்கு மாவு), ஜவ்வரிசி, திப்பி ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழில்  சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவிலும் மற்ற ஈரோடு, திருவண்ணாமலை, கரூர் மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது.  

இந்த தொழிலில் சேகோ ஆலையை நடத்தும் ஆலை அதிபர்கள் மற்றும் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் என சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம்பேர் ஈடுபட்டு உள்ளனர்.  ஆண்டுமுழுவதும் சீசனாக இருப்பினும், நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மரவள்ளிக்கிழங்கு பயிர் அதிக அளவிலான சீசனாக உள்ளது.  மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியின் பயன்பாடு தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.

ஜவ்வரிசியானது தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நேரத்திலும், திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷ விழாக்காலங்களில் தயாரிக்கப்படும் பாயசம் உள்ளிட்ட சிறப்பு உணவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அது தவிர சிலர் ஜவ்வரிசியை பயன்படுத்தி வத்தல் தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள்.  ஆனால் வட மாநிலங்களான மராட்டியம், மேற்குவங்காளம், குஜராத், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஜவ்வரிசி முக்கிய உணவு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அங்கு ஜவ்வரிசியைக் கொண்டு கிச்சடி (உப்புமா), வடை, பாதாம்கீர் போன்று ஜவ்வரிசி கீர், அப்பளம், வத்தல் போன்ற பல்வேறு விதமான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மட்டுமே தயாரிக்கப்படவில்லை.  அதனை விட மிக முக்கியமான பொருளாக ஸ்டார்ச் தயாரிக்கப்படுகிறது.  இந்த பணிகளில் 370 சேகோ ஆலைகள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த ஆலைகள் மூலம் வருடத்துக்கு 23 லட்சம் மூட்டை ஜவ்வரிசியும் அது தவிர ஸ்டார்ச் மாவு, திப்பி போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.  சேலம் மாவட்டம் தவிர ஆந்திர மாநிலம் சாமல்கோட் பகுதியில் சேகோ ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.  ஆனால், அங்கு ஆண்டு ஒன்றுக்கு 3 லட்சம் மூட்டை ஜவ்வரிசி மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  அதனால் இந்த தொழில் சேலம் மாவட்டத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மாத்திரையாகும் கிழங்குமாவு (ஸ்டார்ச்) :-

இதில் கிழங்குமாவின் பயன்பாடு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.  மருத்துவ துறையில் மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.  மேலும் கிழங்கு மாவில் இருந்துதான் குளூக்கோஸ் தயாரிக்கப்படுகிறது.  அது தவிர உயிர்காக்கும் மருந்து பொருளை கிழங்கு மாவுடன் கலந்து அதனை மாத்திரைகளாக தயாரித்து, விற்பனைக்கு வருகின்றன.  மருத்துவத்துக்கு பயன்படுவதால் இந்தியாவின் மிக முக்கியமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து மூட்டை, மூட்டையாக கிழங்கு மாவினை கொள்முதல் செய்கிறார்கள்.

அதுதவிர பிஸ்கட் தயாரிப்பிலும் இந்த கிழங்குமாவு மூலப்பொருள் போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.  கிழங்கு மாவில் பசைத்தன்மை அதிகம் இருப்பதால் ஜவுளி உற்பத்தி துறையில் இது மிகமுக்கிய பங்காற்றி வருகிறது. 

Labels:

1 Comments:

At October 21, 2011 at 2:29 PM , Anonymous Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator