தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் மணலிக்கீரை!

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று. இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது. மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.
வயிற்றுப் பூச்சி நீங்க சிறுகுழந்தைகளின் வயிற்றில் கிருமித்தாக்குதல் அதிகம் இருந்தால் அவர்கள் மிகவும் சோர்ந்து பலவீனமடைந்து விடுவார்கள். ஏனென்றால் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் கிருமிகள் உறிஞ்சிவிடுவதே இதற்கு காரணம். இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இந்த பூச்சிகளை கொல்வதற்கு மணலிக்கீரை சிறந்த மருந்தாகும். மணலிக் கீரையை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன வயிற்றுப் பூச்சி நீங்கும்.


மார்புச்சளி நீங்கும் மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும். மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.


ஞாபக சக்தியைத் தூண்ட ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

ஈரல் பலப்பட ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

Labels:

5 Comments:

At August 13, 2011 at 7:02 PM , Blogger rajamelaiyur said...

Very useful post thanks

 
At August 13, 2011 at 7:50 PM , Blogger இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

 
At August 26, 2011 at 5:51 PM , Anonymous Anonymous said...

[url=http://www.shoppingspyder.com/contact_us.html]spyder outlet[/url]
[url=http://www.shoppingspyder.com/spyder-jackets-c-65.html]spyder shop[/url]
[url=http://www.shoppingspyder.com/specials.html]spyder[/url]

 
At August 29, 2011 at 10:08 AM , Blogger நிரூபன் said...

மணலிக் கீரையின் பயன்பாட்டினை அழகாக விளக்கியிருக்கிறீங்க.

 
At July 4, 2014 at 10:58 PM , Blogger Dr.S.Soundarapandian said...

Fine entry !

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator