தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


பாண்டியன் கிராம வங்கி பணி வாய்ப்புகள்

இந்தியாவின் அரசுடமை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிதியினால் நடத்தப்படும் தேசிய கிராமிய வங்கிகளில் ( ரீஜனல் ரூரல் பேங்க் - ஆர்.ஆர்.பி) ஒன்றான பாண்டியன் கிராம வங்கி மிகச் சிறந்த கிராமப்புற வங்கிச் சேவைகளுக்காக அறியப்படுகிறது. சிறந்த கிராமப்புற வங்கிச் சேவைக்காக இந்த வங்கி பல்வேறு விருது களையும் பெற்றுள்ளது. கிராமப்புற சேவைகளில் நாட்டமும் ஈடுபாடும் கொண்ட எண்ணூறுக்கும் அதிகமான ஊழியர்கள் இந்த வங்கியில் பணி புரிந்து வருகிறார்கள். இந்த வங்கியில் 138 உதவியாளர் மற்றும் 84 அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு : பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க 26.08.2010 அன்று 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவை. இத்துடன் இரண்டு பிரிவுகளுக்கும் தமிழ் மொழித் திறனும், கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாகத் தேவைப்படும். அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் ஹார்டிகல்சர், அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி, அனிமல் ஹஸ்பென்ட்ரி, வெர்டினரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், அக்ரிகல்சுரல் மார்க்கெடிங் அண்டு கோஆபரேஷன், ஐ.டி., சட்டம், நிர்வாகவியல், அக்கவுன்டன்சி, பொருளாதாரம் பிரிவுகளில் பட்டம் பெற்றிருந்தால் முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை : இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படைகளில் தேர்ச்சி முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.300/- ஐ "Pandyan Grama Bank Recruitment Project & 2010" என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுக்க வேண்டும். டி.டி.,யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், பதிவு எண், முகவரி, தேர்வு மையம் ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிகளுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்தபின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் டி.டி.,யை இணைத்து பின் வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் 01.02.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். ஆன்-லைன் பதிவு முறை என்பதால் உங்களுக்கான உபயோகத்திலுள்ள பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Print out of Application for the post...Pandyan Grama Bank Recruitment Project 2010" என்று குறிப்பிடவும்.

அலுவலக உதவியாளர் விண்ணபங்களை அனுப்ப :Post Box No.7501, Motilal Nagar, Goregaon (West), Mumbai 400 104.
அதிகாரி விண்ணப்பங்களை அனுப்ப:Post Box No.7478, Jogeshwari(East), Mumbai 400 060.
இ-மெயில் முகவரி :www.pandyangramabank.in
விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 25.01.2011
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 25.01.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 01.02.2011

Labels: ,

1 Comments:

At January 25, 2011 at 7:22 PM , Blogger சி. கருணாகரசு said...

பயனுள்ளத்தகவல்.... பகிர்வுக்கு நன்றி.

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator