ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸில் 1105 எழுத்தர் பணிகள்

இந்த பணிகளுக்கான தேர்வு மாநிலவாரியாக நடைபெறும். ஒருவர் எந்த மாநில பதவிக்கு விண்ணப்பிக்கிறாரோ அந்த மாநிலத்தில் உள்ள தேர்வுமையத்தைதான் தேர்வுசெய்ய வேண்டும். அந்த மாநில மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பிளஸ் 2 படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
வயது: 01-10-2010 அன்று 18-28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை.
தேர்வுமுறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: www.obcindia.co.in என்ற இணையதளம் மூலம் 25-10-2010ல் இருந்து 24-11-2010 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது இமெயில் முகவரியை குறிப்பிட வேண்டும். இந்த இமெயில் முகவரியில்தான் தேர்வு, நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம், இறுதி முடிவுகள் உள்ளிட்டவை அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முன்பு வங்கியில் தேர்வுக்கட்டணமாக ரூ 300 செலுத்தி அதன் ரசீது எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு வங்கியின் www.obcindia.co.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
Labels: jobs
0 Comments:
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI