தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


மனைவியின் காதலன்!

(OSHO's Story)
ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள். அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது. நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.

அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான். சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

மனைவியை இழந்தவர் கேட்டார்.

தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?

பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:

தெரியாதா உங்களுக்கு? இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.

மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார். அவனது தோள்களை தட்டி கொடுத்தார். பிறகு கூறினார்.

உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.

Labels:

ஷேக்ஸ்பியரின் சிந்தனை!

அறிவாளி மெதுவாகப் போவான் வேகமாக ஓடுகிறவன் தடுக்கிவிழுவான்!

நிதானம் தேவை, 'தானத்தில் சிறந்தது நிதானம்' என வேடிக்கையாகச் சொல்வதுண்டு 'அவசரக்காரனுக்கு புத்திமட்டு' என்று எச்சரிப்பதுண்டு.

இதே கருத்து.... ஷேக்ஸ்பியர் அழகாக, எளிமையாகப் புரிகிற மாதிரி சொல்கிறார்.

மெதுவாகப் போகிறவன் அறிவாளி, ஒவ்வொரு அடியையும் பார்த்துப்பார்த்து வைக்கிறவன் புத்திசாலி, தடுமாறாது.... கீழே விழாது.... வழுக்காது... இலக்கை அடைகிறான்.

அவசரம்.. ஆசை.... நிதானமின்மை... யோசனை இல்லாமை... இதனால் சீக்கிரம் சாதிக்க நினைத்து ஓடுகிறவன் கால் தடுமாறுகிறான். தடுக்கி விழுகிறான், காலில் அடி, வலி, தோல்வி எழுந்து ஓடுவதற்குள் அடுத்தவன் ஜெயிக்கிறான்...

Labels: ,

குரங்கின் பேராசை!

முன்னொரு காலத்தில் ஒரு பேரரசர் வாழ்ந்துவந்தார். பல தேசங்களும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனாலும் அவர் தன்னுடைய படைகளைத் திரட்டிக் கொண்டு ஒரு சிறிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார். பகல் முழுவதும் தன்னுடைய படைகளை வழிநடத்திக் கொண்டு சென்ற அரசரும் அவருடைய வீரர்களும் வழியில் ஒரு காட்டில் ஓய்வெடுத்தனர்.

வீரர்கள் தங்களுடைய குதிரைகள் தின்பதற்காக கொஞ்சம் பட்டாணிகளை அவற்றிற்கு அருகில் வைத்தனர். அந்தக் காட்டில் ஒரு மரத்தின் மீதிருந்து இதைப் பார்த்த குரங்கு ஒன்று, கீழே குதித்து வந்து அந்தப் பட்டாணியைத் தன்னுடைய இரண்டு கைகளிலும் வாயிலும் அள்ளிக்கொண்டு மரத்தின் மேலே தாவிச் சென்று அதைத் தின்னத் தொடங்கியது.

அவ்வாறு தின்று கொண்டிருக்கையில் அதன் கையிலிருந்து ஒரு பட்டாணி கீழே விழுந்து விட்டது. பேராசை மிகுந்த அந்தக் குரங்கு தன்னுடைய கையிலிருந்த பட்டாணிகளைக் கீழே போட்டுவிட்டு காணாமல் போன அந்தப் பட்டாணியை தேடியது. அதனால் அந்த பட்டாணியை கண்டுபிடிக்க முடியவில்லை. வருத்தத்துடன் மரத்தில் ஏறிய குரங்கு, ''ஒரு பட்டாணியை அடைவதற்காக என் கையிலிருந்த அனைத்துப் பட்டாணியையும் நான் கீழே வீசி விட்டேனே'' என்று மிகவும் கவலையுடன் தனக்குள் கூறிக்கொண்டது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த அரசர், ''சிறிய அளவைப் பெறுவதற்காக பெரிய அளவு பட்டாணிகளைத் தவறவிட்ட இந்த முட்டாள் குரங்கைப் போல நான் இருக்கக் கூடாது. சிறிய நாட்டைப் பிடிப்பதற்காகச்செல்வதை விட்டுவிட்டு, தற்போதுள்ள பரந்த ராஜ்ஜியத்தை வைத்து நான் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்'' என்று தனக்க்குள்ளாகக் கூறிக்கொண்டது.

அவரின் இந்த முடிவை அடுத்து அவரும், அவருடைய வீரர்களும் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பினர்.

Labels: