தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


கோ‌‌‌ழி‌க்க‌றி கார வறு‌வ‌ல்

தேவையானவை:-

கோழிக்கறி - அரை ‌கிலோ
பூண்டு - 5
பச்சைமிளகாய் - சிறிதளவு
எண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி
வினிகர் - 1 தே‌க்கர‌ண்டி
உப்பு - சிறிதளவு

செ‌ய்யு‌ம் முறை:-

கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பூ‌ண்டையு‌ம், ப‌ச்சை ‌மிளகாயையு‌ம் ‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் ‌விழுது சே‌ர்‌த்து ‌‌கிள‌றி அரை ம‌ணி நேர‌ம் ஊற ‌விடவு‌ம்.

ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு அ‌தி‌ல் ஊ‌றிய கோ‌ழி‌க்க‌றியை‌க் கொ‌ட்டி வத‌க்கவு‌ம். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும்.

கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும்.

எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும்போது இறக்கி வைக்க வேண்டும். சுவையான கோ‌ழி‌க்க‌றி கார வறுவ‌ல் தயார்.

Labels:

தூதுவளை‌யி‌ன் மக‌த்துவ‌ம்

குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். தொண்டையில் முள் மாட்டியது போன்ற உணர்வும், கிச்..கிச்.. என்ற நெருடலும் ஏற்படும். இதெல்லாவற்றையும் நீக்க தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளை இலை, தண்டு இவற்றிலுள்ள முட்கள் மற்றும் காம்பு, நடுநரம்பு ஆகியவற்றை நீக்கி நிழலில் உலரவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் 2 வேளை உணவுக்குப்பின் 1 கிராம் தூதுவளை இலைப்பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட மார்புச்சளி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல், மூக்கடைப்பு நீங்கும். நன்கு பசியும் ஏற்படும். பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

(அ) தூதுவளை துவையல்

தூதுவளை இலை - 1 கைப்பிடி (காம்பு, நடுநரம்பு, முள் நீக்கி) மிளகாய் வற்றல் - 2 பூண்டு - 2 பல் நல்லெண்ணெய், புளி, உப்பு - தேவையான அளவு

செய்முறை :

தூதுவளை இலையுடன் மிளகாய் வற்றல் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு வதக்கியபின் அவற்றுடன் பூண்டு, புளி, உப்பு கலந்து அரைத்துக் கொள்ளவேண்டும். இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் தொட்டுச்சாப்பிட சளி, தொண்டை கரகரப்பு நீங்கி கலகலவென்றிருக்கும்.

Labels: