தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


அலங்கார மீன்கள் விற்பனையில் பணம் குவிக்கலாம்..

மீன் என்றவுடன் அசைவ பிரியர்களுக்கு வாயில் உமிழ்நீர் சுரந்துவிடும்.  ஆனால், மீன் உணவுக்கு மட்டும் பயன்படும் பொருள் இல்லை.  வீடு மற்றும் அலுவலக வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும் மீன்கள் பயன்படுகிறது.

ஆம், இதற்காகவே பல்வேறு வகையான வண்ண மீன்கள் உள்ளன.  இதில் பலராலும் விரும்பப்படும் தங்க மீன் வகைகளில் மட்டும் 500 வகைகள் உள்ளனவாம்.  சாதாரண மீனின் விலை குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.  அதிக பட்சமாக அதன் வகைக்கு ஏற்ப 65 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வசதி படைத்தவர்கள்தான் மீன் தொட்டி வைத்திருப்பார்கள் என்பது போய், தற்போது நடுத்தர மக்கள்தான் அதிகம் வாங்குகிறார்கள்.  அதற்கேற்றாற்போல் தொட்டியின் விலையும் 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.  உள் அலங்காரத்துக்கு என்று ஸ்பெஷலாக மர வேலைபாடுகளுடன் கூடிய ஸ்டாண்ட் சேர்ந்த கலைநயமிக்க தொட்டிகள் 10 அயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.  இது போன்ற மீன் தொட்டிகளை பெரிய ஓட்டல், ஆஸ்பத்திரிகளில் வைக்கிறார்கள்.  ஒரண்டா கோல்டு, சிங்கதலை கோல்டு, ரெட் கேப் கோல்டு, பேர்ல் ஸ்கேல் கோல்டு, ரூயிங் கோல்டு போன்ற மீன் வகைகளை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.

வசதி படைத்தவர்கள் விரும்பும் ஏஞ்சல் மீன்கள், பார்ப்பதற்கு மதிப்புடையதாக இருந்தாலும் விலை அதிகம் இல்லை.  இதைத்தவிர சீன வாஸ்து மீனான புளோரா, அரவானா மீன்களுக்கு ஏக கிராக்கியாம்.  சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்படும் 5 இஞ்ச் அளவுள்ள சில்லி ரெட் அரவானா எனப்படும் வாஸ்து மீன் ஒன்றின் விலைமட்டும் ரூ.25,000! இத்துடன் கிரீன் ஸ்னோவொய்ட், சில்வர் பிளாக் வகை மீன்களுக்கு உண்டு.  இந்த வகை மீன்களுக்கு சிங்கப்பூர் அரசால் சான்றிதழும் வழங்கப்படுகிறதாம்.  இந்த மீன் ஒன்றின் விலை ரூ. 1,200.

கடல் மீன்களை தொட்டியில் வளர்க்கலாமா?  என்ற சந்தேகம் உள்ளதா?  தாராளமாக வளர்க்கலாம்.  பட்டர்பிளை ஏஞ்சல், புளூரிங் ஏஞ்சல் போன்ற மீன்கள் கட்டாயமாக கடல் நீரில்தான் இருக்க வேண்டும்.  இல்லையென்றால் செயற்கை உப்பு கலந்த நீரில் வளர்க்கலாம்.  ஆனால் செயற்கை உப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 120. சாதாரணமாக 3 அடி தொட்டிக்கு நீங்கள் கடல் மீன்கள் வளர்க்க ரூ. 10,000 வரை செலவாகும்.

இந்த மீன்களுக்கு என்று தனியாக உணவுகள் உள்ளன.  தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்டட் உணவு, வைட்டமின் உணவு, பதப்படுத்தப்பட்ட டிரை வார்ம்ஸ் என்று பல வகைகள் உள்ளன.  காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும்.  மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்றி, புதிதாக தண்ணீர் விடவேண்டும்.

இந்த அரிய வகை மீன்கள் வளர்க்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவதால் இந்த தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

Labels:

1 Comments:

At July 23, 2012 at 5:47 PM , Blogger Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator