புதுத் தொழிலுக்கு பயிற்சி அவசியம்
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு அவ்வப்போது பயிற்சி தேவைப்படுகிறது. இந்த பயிற்சிகள் அவரை புத்துணர்ச்சி கொள்ளச் செய்து, அவர்களுக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும்.
ஒருவர் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், அதற்குமுன் அந்த துறையில் வெற்றி பெற்ற அல்லது நிபுணத்துவம் பெற்றவரிடம் பயிற்சி பெறுவதன் மூலம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கும் அந்த பயிற்சியை அளிக்கலாம். இதன் மூலம் தனது நிறுவனத்தை அவர் நல்லமுறையில் நடத்தி வெற்றிபெற முடியும்.
பொதுவாக ஒரு தொழில் என்பது பல துறைகளை உள்ளடக்கியது. ஒரு தொழில் முனைவோரால் அனைத்து துறைகளிலும் வல்லமை பெறமுடியாவிட்டாலும், அவற்றை ஓரளவாவது அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஒருவர், வரவு-செலவு மற்றும் தனிக்கை, கணக்கு வழக்குகள் பற்றியும் ஓரளவாகவேனும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதேபோன்று ஒரு தொழில் முனைவோர் நிதி நிர்வாகியாக இருந்தால் மட்டும் போதாது, தொழில் நுட்பங்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்துஇருக்க வேண்டும்.
தெரியாத துறைகளை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு பயிற்சி மிகவும் அவசியம். மேலும் இதுபற்றி நன்கு அறிந்துகொள்ள தேவையான ஆலோசகர்களை வைத்துக்கொள்ளலாம். முடிவு எடுக்க முடியாத சிக்கலான சூழலில் இந்த ஆலோசகர்கள் நமக்கு உரிய ஆலோசனைகளை தருவார்கள்.
இந்த ஆலோசகர்கள் பிற நிறுவனங்கள் எப்படிப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி வெற்றிகண்டன என்பதை கற்றறிந்து, தொழில் முறைவோரின் சூழலுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை செய்வார்கள்.
எவ்வளவுதான் திறமைமிக்க ஆலோசகர்கள் அருகில் இருந்தாலும் தொழில் தொடங்குபவர்கள், ஓரளவேனும் பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.
Labels: agriculture
1 Comments:
பயிற்சிகள் அவரை புத்துணர்ச்சி கொள்ளச் செய்து, அவர்களுக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும்./
நிதர்சன்ப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI