தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


கோடீஸ்வரனின் கருணை -..-

(OSHO's story)
ஒரு கோடீஸ்வரன் தபால் அலுவலகத்திற்கு வந்தான். அங்கு இரண்டு முதியவர்கள் தங்களது ஓய்வூதியத்தைப் பெற வரிசையில் நின்றிருந்தனர்.

அவர்களைக் கண்டதும் கோடீஸ்வரனின் உள்ளத்தில் கருணை பிறந்தது. இவர்களை ஒரு வாரகாலம் தன் மாளிகையில் தங்க வைத்து சகல வசதிகளையும் செய்து கொடுத்து ஆனந்தமாக இருக்கச் செய்ய வேண்டும் என்று கருதினான்.

எனவே அம்முதியவர்களை அணுகி தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவர்கள் சம்மதித்தார்கள். தனது விலையுயர்ந்த காரில் அவர்களை தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு வேண்டிய வசதியான அறைகளையும் ஒதிக்கிக் கொடுத்தான்.

அவர்கள் இருவரும் கண்டறியாதன கண்டதாக ஆனந்தமாக அந்த வாழ்வை அனுபவித்து வந்தனர். அன்று வாரத்தின் கடைசி நாள். முதியவர்கள் இருவருக்கும் விடை தர வேண்டிய நாள். அவர்களை சந்திக்க கோடீஸ்வரன் வந்தான்.

முதியவர்களில் ஒருவர் அங்கிருக்கும் நூலகத்தில் இருந்தார். கையில் மதுவும், வாயில் சுருட்டுடனும் இருந்த அவரை நெருங்கி கோடீஸ்வர்ன கேட்டான்.

"ஆனந்தமாக இருந்தீர்களா?"

"மிகவும் உல்லாசமாக அனுபவித்தேன். ஆனால் ஒரு கேள்வி!...." என்றார் முதியவர். "கேளுங்கள்" என்றான் கோடீஸ்வரன்.

முதியவர் கேட்டார்;

"ஒரு வாரமாக என்னுடன் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி யார்?..."

கோடீஸ்வரன் (!!!!!!!!!!!!!).......

Labels:

0 Comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator