தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


விண் ஆம்ப் 5.541

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருக்கும் சொல்லத் தேவையில்லாத தகவல் விண் ஆம்ப். பாட்டுக்களை கேட்டு ரசிப்பதற்கும் வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழவும் இலவசமாகக் கிடைக்கும் விண் ஆம்ப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இதன் புதிய பதிப்பு விண் ஆம்ப் 5.541 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. விண் ஆம்ப் வரத் தொடங்கிய பின் இது 35 ஆவது முறையாக மேம்படுத்தப்பட்ட தொகுப்பாகும்.

இந்த புதிய பதிப்பு முற்றிலும் புதிய இன்டர்பேஸுடன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஆடியோ பார்மட்டுகளை இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை: CDA, MIDI, MP1/2/3/4, AAC, OGG, WAV, AIF, WMA மற்றவை ஏற்கனவே இந்த புரோகிராம் கையாண்டு வருபவை ஆகும். பதிப்பு 5.52 லிருந்து வீடியோவினைக் காண வசதி செய்து தரப்பட்டது. அது இன்றளவிலும் தொடர்கிறது. இந்த புதிய பதிப்பில் MPG, M2V, AVI and ASF ஆகிய பார்மட்டுகள் இயக்கப்படுகின்றன.

இந்தச் சிறிய புதிய புரோகிராமில் நாம் எதிர்பார்க்கும் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. திரும்ப திரும்ப பாடும் ரிபீட் வசதி, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கேட்க லூப் வசதி, ஐ.டி. 3 டேக் சப்போர்ட், ட்ரேக்குகளுக்கு இடையில் இணைப்பு, சி.டி. யில் எழுத, ஏற்கனவே பதிந்தவற்றில் இருந்து நாம் விரும்பும் ட்ரேக்கினை மட்டும் எடுத்து பதிய, இன்டர்நெட் டிவி, ரேடியோ கேட்க என இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

ஏற்கனவே மீடியா மேனேஜர் 10 பேன்ட் கிராபிக் ஈக்குவலைசர், விசுவலைசேஷன் மற்றும் பிளே லிஸ்ட் எடிட்டர் ஆகியவற்றை விண் ஆம்ப் வழங்கி வருகிறது.

கம்ப்யூட்டர் பயனாளர்களுக்கு ஆடியோ கேட்க ஒரு நல்ல இலவச புரோகிராமாக அறிமுகமாகி பல ஆண்டுகளில் பல்வேறு கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது விண் ஆம்ப். தற்போது ஏறத்தாழ 20 ஆயிரம் ஸ்கின்களுடனும் 461 ப்ளக் இன் வசதிகளுடனும் விண் ஆம்ப் உள்ளது. ஒரு மீடியா பிளேயரில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அனைத்தையும் விண் ஆம்ப் புரோகிராமில் காணலாம். இதுவரை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் உடனே இதனை இறக்கிப் பதிந்து பயன்படுத்தவும். ஏற்கனவே பதிந்திருந்தால் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ளவும். இதற்கான இணைய தள முகவரி www.winamp.com

2. A. கூகுள் சைட்ஸ்

கூகுள் ஏதேனும் புதிய வசதிகளைத் தந்து கொண்டே தான் இருக்கிறது. கூகுள் சைட்ஸ் என்னும் வசதியினைத் தந்து பல மாதங்கள் ஆன பின்னரும் பலரும் இது குறித்து அறியாமல் இருக்கின்றனர். இதோ அது குறித்த சில தகவல்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் வெப் சைட்டை உருவாக்கலாம். உங்களுக்கென ஏற்கனவே ஒரு இணைய தளம் இருப்பின் அதனை கூகுள் தரும் இடத்தில் இணைக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போமா!

கூகுள் சைட்ஸ் செல்ல http://sites.google.com என்ற இணைய தளம் செல்லவும். உங்களுக்கு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் அதனைப் பயன்படுத்தி உள்ளே செல்லுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அக்கவுண்ட் இல்லை என்றால் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாமே மிக எளிதுதான். தயாராகி உள்ளே சென்ற பின்னர் Create Site என்பதில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து நீங்கள் நிரப்புவதற்கு படிவம் ஒன்று தரப்படும். கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்திடுங்கள். இந்த வேளையில் உங்கள் சைட்டுக்கு ஒரு தலைப்பினையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த இடம் தான் உங்கள் வெப்சைட்டின் யு.ஆர்.எல். ஆகும். இதன் மூலம் தான் உங்கள் வெப்சைட்டை நீங்கள் அணுக முடியும். அது http://sites.google.com/ site/name என்றபடி இருக்கும். இதில் ணச்ட்ஞு என்ற இடத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் இருக்கும். இப்போது மீண்டும் Create Site செல்லுங்கள்.

வெப்சைட் உருவாக்குவதற்கான இடத்திற்குச் செல்வீர்கள். புதிய இணையப் பக்கம் உருவாக்க வேண்டும் என்றால் Create New Page என்பதில் கிளிக் செய்திடுங்கள். ஏற்கனவே உள்ள வெப்சைட்டில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என்றால் Edit Page என்ற இடத்தில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் வெப்சைட்டினை உருவாக்கி முடித்தபின் Save கிளிக் செய்து வெளியே வாருங்கள். அவ்வளவுதான் உங்கள் இணைய வீடு தயார் ஆகிவிட்டது. இதனைக் காண உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்புங்கள்.

Labels:

0 Comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator