தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


நீங்களே உங்கள் மெனுவை தயாரிக்கலாம்!

வேர்ட் தொகுப்பில் உள்ள மெனுவினை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ள இந்த பகுதியில் பல டிப்ஸ்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் படித்து பலரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்து தாங்கள் பயன்படுத்துவதோடு தங்கள் நண்பர்களிடமும் காட்டி மகிழ்கின்றனர். எடுத்துக் காட்டாக ஒருவர் என்னிடம் உங்களுக்கு வேர்டில் பைல் மெனுவைத் திறந்தால் எத்தனை பைல்கள் கீழாகப் பட்டியலிடப்படும் என்று கேட்டார்.


நான் வழக்கம்போல அவரையும் அவர் கம்ப்யூட்டரையும் அப்பாவியாகப் பார்த்தேன். என் கம்ப்யூட்டரில் 9 பைல்கள் கிடைக்கும் என்றார். அப்படியா! காட்டு என்றவுடன் வேர்டைத் திறந்து பைல் மெனுவினைக் காட்டினார். பின் ஒரு வெற்றி சிரிப்புடன் கம்ப்யூட்டர் மலரில் போட்டிருந்தார்கள் என்றார். இப்படி மெனுக்களை நமக்கேற்றபடி வளைக்காமல் நாமே நம் வசதிக்கேற்ப மெனுக்களை உருவாக்கினால் என்ன! உருவாக்கலாமா! அதற்கேற்ற வழிகளை இங்கு பார்ப்போம்.


இதற்கு Customize windowI ஐ முதலில் பெற வேண்டும். இதனைப் பெற Tools மெனு சென்று Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது எந்த டூல்பாரிலாவது ரைட் கிளிக் செய்து அதில் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். Customize விண்டோ திறக்கையில் Commands டேப் செல்லவும். இடது பக்கமாக Categories list பட்டியல் கிடைக்கும். இந்த பட்டியலில் கீழாகச் சென்று New Menu என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நியூமெனு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மவுஸ் பாய்ண்ட்டரை கமாண்ட்ஸ் லிஸ்ட்டில் வலது பக்கமாகக் கொண்டு செல்லவும். இப்போது New Menu கட்டளையை அப்படியே கஸ்டமைஸ் விண்டோவிலிருந்து இழுத்துச் சென்று புரோகிராம் விண்டோவின் மேலாக விடவும். அல்லது இங்கே இருக்கின்ற மெனுக்களில் ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிடவும். இப்போது மெனு பட்டியலில் New Menu என ஒரு மெனு இருப்பதனைக் காணலாம். கஸ்டமைஸ் விண்டோ இன்னும் திறந்திருக்கும் நிலையில் New Menu பெயரின் மீது ரைட் கிளிக் செய்திடவும். அங்கு எழும் பாப் அப் மெனுவில் “Name” என்று ஒரு பீல்டு இருக்கும். அதில் கிளிக் செய்து ஒரு புது பெயர் தரவும். உங்களுக்குப் பிடித்த நீங்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் ஒரு பெயராக இருக்கலாம். இனி என்டர் கீயைத் தட்டுங்கள். ஆஹா! பாராட்டுக்கள். உங்களுக்காய் நீங்களே ஒரு மெனுவினை பில்கேட்ஸின் விண்டோஸுக்குள் உருவாக்கிவிட்டீர்களே. இனி கஸ்டமைஸ் விண்டோவில் உள்ள கமாண்ட் டேபைப் பயன்படுத்தி என்னவெல்லாம் உங்கள் நியூ மெனுவில் இருக்க வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அவை அனைத்தையும் தேடிப் பிடித்து இழுத்து போடவும். ஆசையில் நிறைய கமாண்ட்ஸைப் போட்டுவிட்டீர்களா! அப்படியானால் அவற்றை இரண்டாகப் பட்டியலிடலாமே! மெனுவில் உள்ள கமாண்ட் ஒன்றில் ரைட் கிளிக் செய்து அதில் Begin A Group என்பதில் கிளிக் செய்திடவும். இந்த மெனுவில் உள்ளவற்றில் அதில் கர்சரைக் கொண்டு சென்று இழுத்து எப்படி வேண்டுமானாலும் வரிசையை அமைத்துக் கொள்ளலாம். எனவே பொறுமையாக எப்படி அமைத்தால் நன்றாக இருக்குமோ அப்படி அவற்றை வகைப் படுத்தவும். இதில் எப்போது மாற்றங்கள் ஏற்படுத்த விரும் புகிறீர்களோ அப்போதெல்லாம் மேலே கூறியபடி மெனுவிற்குள் சென்று மாற்றங்களை ஏற்படுத்தி சேவ் செய்து கொள்ளலாம்.

Labels:

0 Comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator