தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ்...

இலவசமாகக் கிடைப்பதில் ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பு தான் பிரபலமானது. இலவசம் மட்டுமின்றி அவ்வப்போது அப்டேட் செய்யப் படுவதும் அதனால் அவ்வப்போது வரும் வைரஸ்களை நீக்குவதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளில் இலவசமாகக் கிடைப்பதில் ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்புதான் பிரபலமானது. இலவசம் மட்டுமின்றி அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவதும் அதனால் அவ்வப்போது வரும் வைரஸ்களை நீக்குவதிலும் சிறப்பாகச் செயல்படுவதிலும் இது பெயர் பெற்றதாகும். இதன் புதிய பதிப்பு 8 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. நம்மில் பலரும் வீட்டு கம்ப்யூட்டர்களிலும் அலுவலக பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் ஏவிஜி தொகுப்பைப் பயன்படுத்துவதால் இந்த புதிய பதிப்பின் கூடுதல் வசதிகள் குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.

அண்மைக் காலம் வரை கடந்த ஓராண்டாக பதிப்பு 7.5 பயன்படுத்தப்பட்டு வந்தது. இடையே பதிப்பு 8 வந்துள்ளது; அப்டேட் செய்யவில்லையா ? என்று ஒரு அறிவிப்பு வந்தது. இதனை ஒருவேளை பணம் கட்டி வாங்க வேண்டுமோ என்ற எண்ணத்துடன் குறிப்பிட்ட தளம் நுழைந்தால் அது அப்டேட்டட் புதிய பதிப்பு எனத் தெரிந்தது. நீங்கள் 7.5 அல்லது முந்தைய பதிப் பினைப் பயன் படுத் துபவராக இருந்தால் உடனே பதிப்பு 8க்கு மாறிக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஜூன் மாதத்திற்குப் பின் 7.5 பதிப்பிற்கான உதவிக் குறிப்புகள் கிடைக்காது. புதிய பதிப்பினைப் பெற http://free.grisoft.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு Free Edition என்பதில் சரியாகக் கிளிக் செய்திடுங்கள். வரிசையாக அங்கு தரப்பட்டிருக்கும் வழிகளின் படி சென்று உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்திடுங்கள். டவுண் லோட் செய்து முடித்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் டாஸ்க் பாரில் கடிகாரத்திற்கு அருகில் நான்கு வண்ணங்களிலான ஒரு சதுரம் இருக்கும்.

அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு வில் “Quit AVG free control center” என்பதில் கிளிக் செய்திடுங்கள். உடனே ஒரு எச்சரிக்கை செய்தியில் வெளி யேறப் போகிறீர்களா? என்று தரப்படும். அதில் யெஸ் கொடுத்து வெளியேற வும். இனி இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம் களையும் நிறுத்தவும். அடுத்து நீங்கள் டவுண்லோட் செய்த ஏவிஜி அப்ளிகேஷன் பைலை இருமுறை கிளிக் செய்திடுங்கள். இனி இலவச இன்ஸ்டலேஷன் தொடங்கும். இம்முறை என்ன சிறப்பு என்றால் இதுவே முன்பு இன்ஸ்டால் செய்த பழைய ஏவிஜி தொகுப்பினை நீக்கிவிடும்.

இனி இன்ஸ்டாலேஷன் வழிகளை நெக்ஸ்ட் அழுத்திப் பின்பற்றவும். இறுதியில் அப்டேட் செய்யப் போகிறேன் என்று சொல்லி இணைய த்தை நாடும் செயல் மேற்கொள்ள ப்படும். இறுதியில் அப்டேட்டிங் பெய்ல்டு என்று செய்தி வரும். கவலைப் பட வேண்டும். ஓகே கிளிக் செய்து வெளியேற முயற்சிக் கவும். இப்போது கம்ப்யூ ட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடச் சொல்லி செய்தி கிடைக்கும். யெஸ் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ரீ ஸ்டார்ட் ஆகி ஏவிஜியின் புதிய பதிப்பு செயல்படத் தொடங்கும். இனி அடுத்த வேலை அப்டேட் செய்திடும் வேலை. முதலில் பெய்ல்டு என்று வந்ததல்லவா? அந்தப் பணியை இப்போது மேற்கொள்ளலாம். இப்போது ஏவிஜி ஐகானில் ஒரு சிறிய சிகப்பு எக்ஸ் அடையாளம் இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் வரும் மெனுவில் அப்டேட் செய்திட ஆப்ஷன் கொடுங்கள். இனி இந்த புதிய பதிப்பு அப்டேட் செய்யப்படும். உங்கள் கம்ப்யூட்டரிலும் செயல்படும்.

8.A. யு.எஸ்.பி. எஜெக்டர்

பிளாஷ் டிரைவ்களைப் பயன்படுத்தாத நாள் இல்லை. யு.எஸ்.பி. போர்ட்டில் பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தாமல் நம் கம்ப்யூட்டர் பயன்பாடு நிறைவடைவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதற்கான ஐகானை கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் குறிப்பிட்ட சாதனத்தைத் தேர்ந்தெடுத்து பின் ஸ்டாப் அழுத்தி Safely Remove Hardware என்று செய்தி வந்தவுடன் போர்ட்டில் உள்ள சாதனத்தை வெளியே எடுக்கிறோம். அது பிளாஷ் டிரைவாகவோ, ஐபாட் சாதனமாகவோ, டிஜிட்டல் கேமராவாகவோ அல்லது மொபைல் போனாகவோ இருக்கலாம். இந்த சுற்று வழி செல்லும் சிரமத்தைப் போக்குவதற்காக யு.எஸ்.பி. எஜெக்டர் என்னும் புரோகிராம் இணைய தளத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராம் என்ன செய்கிறது? போர்ட்டில் இணைத்துள்ள எந்த ஒரு சாதனைத்தையும் விரைவாக வெளியே எடுத்திட துணை புரிகிறது.

முதலில் இது பென் டிரைவ்களுக்கு மட்டுமே இயங்கியது. இப்போது யு.எஸ்.பி. டிரைவில் இணைக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் இயங்கி வருகிறது. இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால் டிரைவில் இணைத்துள்ள எந்த சாதனத்தையும் டபுள் கிளிக் அல்லது என்டர் தட்டி உடனே எடுத்துவிடலாம். பலர் ஏற்கனவே எக்ஸ்பி தரும் வசதிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அது எளிதுதானே என எண்ணலாம். ஆனால் விரைவாகச் செயல்பட இதுவே சரியான புரோகிராம் ஆக உள்ளது. இந்த புரோகிராமினை http://quick.mixnmojo.com/usbdiskejector என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம்.

Labels:

0 Comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator