ஜூலு நாட்டில் மாவீரன்!
(OSHO's story)
ஜூலு நாட்டில் மாவீரன் ஒருவன் இருந்தான். அவன் அந்நாட்டு மன்னனிடம் சென்று அவனது மகளைத் தனக்குத் திருமணம் செய்துதருமாறு கேட்டான்.'நான் இடுகின்ற மூன்று கட்டளைகளை அணுவளவும் பிசகாது எவன் ஒருவன் நிறைவேற்றி வைக்கின்றானோ, அவனுக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்' என்று அந்த மன்னன் அவனுக்குப் பதில் அளித்தான்.
'அந்த மூன்று கட்டளைகள் என்னென்ன? சொல்லுங்கள் மன்னவா! உடனே அவற்றை நிறைவேற்றி வைக்கிறேன்!' என்றான் அந்த மாவீரன்.
'நான் மூன்று கூடாரங்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றேன். முதல் கூடாரத்தில் பெரியதொரு சாராயப் பீப்பாய் இருக்கிறது. அதில் உள்ள சாராயம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்து விட வேண்டும்'.
'இந்தக் காரியத்தை முடித்த கையோடு உடனே இரண்டாவது கூடாரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த கொரில்லா குரங்கு ஒன்று இருக்கும். ஏழு அடி உயரம் உள்ள அந்த கொரில்லா குரங்கிற்குத் தொல்லை தரும் பல் எது என்பதைக் கண்டு பிடித்து, அந்தப் பல்லை வெறுமனே கையினாலேயே பிடுங்கி எறிய வேண்டும்.
இந்த வேலை முடிந்தவுடன் சிறிதும் தாமதியாது மூன்றாவது கூடாரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ஒரு ஆங்கிலேயப் பெண் இருப்பாள். எந்த ஒரு ஆண்மகனும் அவளை உடலுறவில் முழுதும் திருப்தி செய்ய முடியாதபடி ஒரு தனிப் பயிற்சி பெற்றவளாக இருப்பாள். அவளோடு உடலுறவு கொண்டு அவளை முழுவதும் திருப்தி செய்ய வேண்டும்' என்றான் மன்னன்.
'சரி மன்னவா!' என்று கூறிவிட்டு அந்த மாவீரன் முதல் கூடாரத்தினுள் நுழைந்தான். ஒரே மூச்சில் பீப்பாய் சாராயத்தையும் குடித்து முடித்தான்.
பின்னர் பைத்தியம் பிடித்த கொரில்லாக் குரங்கு இருக்கும் கூடாரத்தினுள் தடுமாறியபடி நுழைந்தான்.
அங்கே அவனுக்கும் அந்த கொரில்லாவுக்கும் ஒரு பயங்கரமான சண்டை நடந்தது. அந்த சண்டையில் அந்தக் கூடாரமே ஆட்டம் கண்டது. வேதனைக் கூக்குரல் விண்ணைப் பிளந்தது. அந்தக் கொரில்லாவின் உடம்பின் மேலுள்ள முடிக்கற்றைகள் பறந்து வந்து வெளியே விழுந்தன. மனிதக் காது ஒன்றுகூட வெளியில் வந்து விழுந்தது.
இந்தக் கூச்சலும் கூக்குரலும் இருபது நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அந்தக் கூடாரத்திலிருந்து இரத்தம் தோய்ந்த உடம்புடன் அந்த மாவீரன் தவழ்ந்து கொண்டே வெளியே வந்தான்.
தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று அந்த மன்னனைப் பார்த்துக் கேட்டான்.
'சரி. அரசே! இப்போது பல்வலியால் அவதிப்படும் அந்த ஆங்கிலேயப் பெண்மணி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா?' ..............!!!!!!!!
Labels: storys
2 Comments:
ஹா ஹா ஹா
செம காமடி
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI