சாக்லெட் (chocolate) தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோகோ (cocoa) ஆகும். உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள காகா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது. எனவே சர்வதேச அளவில் கோகோவுக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 2,030 ஹெக்டேர் பரப்பளவில் கோகோ பயிரிடப்பட்டு வந்தது. இது தற்போது 6,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்ததக்கது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இது மேலும் 2,000 ஹெக்டேர் அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், தற்போது இதன் சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். நீர்ப்பாசன வசதி உள்ள தென்னந் தோப்புகளில் கோகோவை (cocoa) ஊடுபயிராக பயிர் செய்து வருவாய் ஈட்டலாம். தற்போது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோகோ ஊடுபயிராக பயிர் செய்யப்படுகிறது.
Read more »Labels: agriculture