கோழிக்கறி கார வறுவல்
தேவையானவை:-கோழிக்கறி - அரை கிலோ
பூண்டு - 5
பச்சைமிளகாய் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
செய்யும் முறை:-
கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பூண்டையும், பச்சை மிளகாயையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் ஊறிய கோழிக்கறியைக் கொட்டி வதக்கவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும்.
கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும்.
எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும்போது இறக்கி வைக்க வேண்டும். சுவையான கோழிக்கறி கார வறுவல் தயார்.
Labels: cuisine

குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். தொண்டையில் முள் மாட்டியது போன்ற உணர்வும், கிச்..கிச்.. என்ற நெருடலும் ஏற்படும். இதெல்லாவற்றையும் நீக்க தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது.
